sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெண்கள் தானம் பெறுவதில்லை!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெண்கள் தானம் பெறுவதில்லை!

கனவு தவிர்... நிஜமாய் நில்!: பெண்கள் தானம் பெறுவதில்லை!


PUBLISHED ON : மார் 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீவிர சிறுநீரக நோய், ஆண்டுதோறும், 14 சதவீதம் பெண்களை பாதிக்கிறது. உலகம் முழுவதும், ஆறு லட்சம் பெண்கள் இந்தப் பிரச்னையால் இறக்கின்றனர். பெண்களை பொறுத்தவரை, மெதுவாகவே சிறுநீரக நோய் பரவுகிறது.

பெண்களின் மனநிலை, சமூக வாழ்க்கை, பொருளாதார நிலை, கல்வி அறிவு, விழிப்புணர்வு இல்லாதது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்கள், ஆண்களுக்கு சிறுநீரக தானம் செய்வது போல, ஆண்கள், பெண்களுக்கு சிறுநீரக தானம் செய்வது கிடையாது. கர்ப்பக் காலத்தில், சிறுநீரக நோய் ஏற்பட்டால், கர்ப்பம் கலைவதற்கு வாய்ப்பு அதிகமாவதுடன், மீண்டும் கருத்தரிக்கும் வாய்ப்பும் குறைவு.

அதிக ரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரக நோயின் காரணமாக, குறைப்பிரசவம் ஏற்படும்; கருத்தரிக்கும் திறனும் குறைவாக இருக்கும். இந்த நிலையில், 'டயாலிசிஸ்' செய்வது அவசியம்.

அதே சமயம், கர்ப்பம் சம்பந்தமான நோய்களால், சிறுநீரக நோய்க்கு அதிக வாய்ப்பு உண்டு.

'பிளாசென்டா' எனப்படும், தாய் - சேய் இணைப்புத் திசு, சிறுநீரகத்தை பாதிப்பதால், ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதம் அதிகம் வெளியேறி, ரத்தப்போக்கு ஏற்பட்டு, சிறுநீரகங்கள் பாதிப்பு அடைகின்றன.

தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, தேவையான அளவு தண்ணீர் குடித்து, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது.

உயரத்திற்கு ஏற்ப, உடல் எடையுடன் இருப்பது, நார்ச்சத்து அதிகம் உள்ள தானியங்களை சாப்பிடுவது, காய்கறி, பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம்.

கலோரி குறைந்த உணவு வகைகளை சாப்பிடுவது, தினமும், 5 கிராமிற்கு மேல், உப்பு சாப்பிடாமல் இருப்பது, வெள்ளை சர்க்கரை, மைதா போன்றவற்றை தவிர்ப்பது உட்பட, சிறுநீரக செயல்பாடு குறித்து, தேவையான பரிசோதனை செய்து கொள்வது, சிறுநீரக நோய் வராமல் தடுக்கும்.

டாக்டர் ஏ.ஆர்.ஜெகத் நாராயணன், சேலம்

narayanan.drjagath02@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us