sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: காலத்திற்கு ஏற்ப சுவைக்க வேண்டும்!

/

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: காலத்திற்கு ஏற்ப சுவைக்க வேண்டும்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: காலத்திற்கு ஏற்ப சுவைக்க வேண்டும்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: காலத்திற்கு ஏற்ப சுவைக்க வேண்டும்!


PUBLISHED ON : பிப் 11, 2018

Google News

PUBLISHED ON : பிப் 11, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பருவ காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள், எவ்வாறு உடலை பாதிக்கின்றன; உணவுப் பழக்கங்களை காலத்திற்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

குளிர் காலமான, கார்த்திகை முதல் மாசி வரை, குளிர் காற்று, வயிற்றில் உள்ள ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

இக்கால கட்டத்தில், உடலுக்கு சக்தியை தரும் உணவை சாப்பிட வேண்டும்; இல்லை எனில், விறகு இன்றி அடுப்பு அணைவது போல, ஜீரண அக்னி அணைந்து விடும் அல்லது அதிகமாகி, உடலில் உள்ள தாதுக்களையே தின்று, உடலை அழித்து விடும். குளிரால் வாயுவும் அதிகமாகும்.

நாம் உண்ணும் உணவு, பசிக்கு ஈடு கொடுக்கும் விதத்திலும், வாயுவைத் தணிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதனால், வெல்லம், மாவு, உளுந்து, கரும்பு, பால், மாமிசம், புதிய அரிசி சோறு போன்ற மாவுச்சத்து, இனிப்பு, புளிப்பு, உப்பு சுவையுள்ள உணவை சாப்பிட வேண்டும்.

எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளிப்பது, வெப்பம் உடலில் படும்படி இருப்பது மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன் தரும். இளவேனில் காலமான, பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில், சூரியன் வடக்கு நோக்கி செல்வதால், வெப்பம் அதிகமாகும்; ஜீரண சக்தி குறைந்து, பல வித நோய்கள் வரும்.

கபம் சம்பந்தப்பட்ட நோய்களான சளி, இருமல், ஜூரம் போன்றவை பாதிக்கும். இந்த பருவத்தில் சாப்பிடும் உணவுகள், கபத்தை குறைக்கவும், பசியை அதிகரிக்கச் செய்வதாகவும் இருக்க வேண்டும்.

மூலிகை கலந்த அல்லது தேன் கலந்த நீர் குடிக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகாத எண்ணெய், உப்பு, இனிப்பு மற்றும் புளிப்பு சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கோடை காலமான, வைகாசி முதல் ஆனி மாதம் வரை, வெப்பம் அதிகரிக்கும் காலம். வறட்சியால், உடலில் வாயு அதிகரிக்கும். எனவே, அதிக உடற்பயிற்சி, வெயிலில் செல்வது, காரம், புளிப்பு, உப்பு போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

மண் பானையில் வைத்த குளிர்ந்த பானம், நெய் கலந்த கஞ்சி, பால், சர்க்கரை, திராட்சை, இளநீர் பயன்படுத்தலாம். வெட்டிவேர், சந்தனம் கலந்த நீர் குடிப்பது, இரவில் திறந்தவெளியில் உறங்குவது பலன் தரும்.

மழைக்காலமான, ஆடி மற்றும் ஆவணி மாதங்களில், ஜீரண சக்தி குறைந்து, வாயு தொல்லையும், பித்தமும் அதிகரிக்கும்; இதனால், வாத நோய்கள் ஏற்படும். வஸ்தி என்ற சிகிச்சையால், வாயுவைக் குறைக்கலாம். பழைய அரிசி, கோதுமையில் செய்த கஞ்சி, நீரைக் காய்ச்சிக்குடிப்பது நல்லது. நடை பயிற்சி, உடற்பயிற்சி, பகல் துாக்கம் மற்றும் வெயில் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இலையுதிர் காலமான, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில், உடலில் பித்தம் அதிகரிக்கும்.

கசப்பு, துவர்ப்பு, இனிப்பு கலந்த உணவுகள், பசித்தால், அரிசி, கோதுமை, பச்சைப்பயறு, சர்க்கரை, தேன், நெல்லி, திராட்சை ஆகியவற்றை சாப்பிடலாம்; வயிறு நிறைய சாப்பிடுவதும் மற்றும் பகல் துாக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

எல்லா பருவத்திலும், எல்லா சுவைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றாலும், எந்தப் பருவத்தில், எந்த சுவை சிறந்ததோ, அதை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வசந்த காலத்தில், காரம், கசப்பு மற்றும் துவர்ப்பு, கோடை காலத்தில் இனிப்பு, மழை மற்றும் குளிர் காலத்தில், இனிப்பு, புளிப்பு, உப்பு, இலையுதிர் காலத்தில், துவர்ப்பு, கசப்பு, இனிப்பு சுவையுள்ளவற்றை சாப்பிட வேண்டும்.

டாக்டர் பி.எல்.டி.கிரிஜா , ஆயுர்வேத சிறப்பு மருத்துவர், சென்னை.

sanjeevanifoundation@gmail.com







      Dinamalar
      Follow us