குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அதிக உடற்பயிற்சி - அதிக பசி!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: அதிக உடற்பயிற்சி - அதிக பசி!
PUBLISHED ON : பிப் 11, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரபியல் ரீதியாக, உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு எனக்கு உள்ளது. என்னுடைய, 'லைப் டைம்'ல, நான்காவது முறையாக, எடையைக் குறைத்துள்ளேன். இந்த முறை, நான் பின்பற்றிய வழிமுறைகள்...
ஆறு வேளை சாப்பிடுவது, அதிக பசி எடுப்பதற்கு முன் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது, கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள அரிசி, கோதுமை மற்றும் கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை, 5 சதவீதமும், புரதம் உட்பட, ஊட்டச்சத்து மிகுந்த உணவை, 95 சதவீதமும் சாப்பிடுவது, காலையில், 30 நிமிடங்கள் நடை பயிற்சி...
அதற்கு மேல் அதிக உடற்பயிற்சி செய்தால், நிறைய பசித்து, அதிகம் சாப்பிட வேண்டியுள்ளது. இப்படிச் செய்வதால், மாதம் 1 கிலோ தாராளமாக குறைக்கலாம்.
விஜயதாரணி, எம்.எல்.ஏ.,

