sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

/

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?


PUBLISHED ON : பிப் 11, 2018

Google News

PUBLISHED ON : பிப் 11, 2018


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என, மருத்துவர்கள் அழைக்கின்றனர். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும். அல்சீமர் என்னும் நோயோ, பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர்.

பகலிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளும் இருந்தாலும், பெரும்பாலும் இரவிலேயே படுக்கையில் சிறுநீர் கழிக்கும் இந்நோய் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகிறது. குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகிவிடும். அல்லது சிகிச்சையின் மூலம் சரியாக்கி விடலாம்.)ஒரு சில குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்னை.

ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல; அது பற்றி கவலைப்பட தேவையில்லை. படுக்கையில் சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட உடலியல் அல்லது உளவியல் காரணத்தை தனித்து கூற இயலாது. பல காரணிகள் கூட்டாக இந்நோயை தோற்றுவிக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தைகளினால் சிறுநீரகமும், சிறுநீர் பையும் சற்றே பிறழ்வான செயல்பாடுகளை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதைப் போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு மண்டலமும் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது. மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை கொண்டிருந்ததும் குடும்பத்தில் யாரேனும் பிற உறுப்பினர்கள் இந்நோய் கொண்டிருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக இருக்கலாம்.

குழந்தையின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வு பதிந்திருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக அமைக்கிறது. பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு மனப்பிரச்னையின் அறிகுறியாகும்.படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்அவமானமும், பிறர் முன் தலைகுனிவும் கொள்வர், ஏணிப்படுக்கையில் படுப்பதையும் தவிர்ப்பர். தனித்திருத்தல், பிறருடனான பொருத்தப்பாட்டு பிரச்னைகள், குறைவான தன்மதிப்பு ஆகியவை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளின் பிற உளவியல் பிரச்னைகளாகும். எனவே இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.குழந்தைகள் தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும்போது நீரோ அல்லது பிற திரவ உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்கவும்.






      Dinamalar
      Follow us