தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பித்தம் போக்கும் எண்ணெய் குளியல்!

பித்தம் போக்கும் எண்ணெய் குளியல்!

பித்தம் போக்கும் எண்ணெய் குளியல்!


PUBLISHED ON : பிப் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஞாயிற்றுக்கிழமை ஆச்சுனா தவறாம எண்ணெய் தேச்சு குளிப்பா என்பது, வெளியூர் செல்லும் மகனிடம் நம்ம ஊர் தாய்மார்கள் சொல்லும் அறிவுரைகளில் பிரதானமாக இருக்கும்.

அப்படி என்ன இருக்கு எண்ணெய் குளியலில்? உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு எண்ணெய்க் குளியலைச் சிறந்த தீர்வாக முன்வைக்கிறது இயற்கை மருத்துவம். எண்ணெய்க் குளியல் நம் உடலில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்துகிறது. எண்ணெய் மூலம் உடலில் மசாஜ் செய்யும்போது, அந்த எண்ணெய் சருமத்துக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கிறது. உடலில் தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியம் அளிக்கிறது.

அழகை பராமரிக்கத் தேங்காய் எண்ணெய், கபம், வாதம், பித்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க நல்லெண்ணெய், தசைகள், மூட்டுகளின் வலிமைக்கு விளக்கெண்ணெய் ஆகியவற்றை எண்ணெய்க் குளியலுக்குப் பயன்

படுத்தி வந்துள்ளனர். எண்ணெய்க் குளியலுக்கு உகந்தது அதிகாலை நேரம். அந்த நேரத்தில் சூரிய ஒளி உடலில் படுவதால் ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடலுக்கு வைட்டமின்டி சத்து கிடைக்கிறது.

எண்ணெயை நேரடியாக சூடுபடுத்தக்கூடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சுடவைத்துப் பின் எண்ணெய்ப் பாத்திரத்தை அதில் வைத்து சூடு பண்ணலாம். எண்ணெய் தேய்த்து 45 நிமிடம் முதல் ஒருமணி நேரத்துக்குள் குளித்துவிட வேண்டும். எண்ணெய்க் குளியலுக்கு மிதமான சூட்டில் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

கெமிக்கல் சேர்த்த ஷாம்பு, சோப்புகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கையான அரப்பு, சீயக்காய், கடலை மாவு, பயத்த மாவு ஆகியவற்றை பயன்படுத்தி குளிக்கலாம். எண்ணெய் குளியல் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ரத்தநாளத்தில் அடைப்பு உருவாவது தடுக்கப்படும். தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பையும் எண்ணெய்க் குளியல் கரைக்கிறது.

எண்ணெய்க் குளியலின் பின் பசி எடுக்கும். ஆனால், எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்க் குளியல் அன்று அசைவ உணவுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. பால், மோர், தயிர் போன்ற குளிர்ச்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். அன்று தாம்பத்யமும் கூடாது.

எண்ணெய்க் குளியலின் வழியாகக் கிடைத்த பிராண சக்தியை உடல் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் தசை, எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது. குழந்தையின்மை பிரச்னைக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. மன அழுத்தத்தையும் நீக்குகிறது.

வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் என்பதை வழக்கப்படுத்திக்கொள்ளலாம். எண்ணெய் குளியலின்போது பாதத்தில் இருந்து நீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், அடிபட்டு உள் காயம்பட்டவர்கள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், நாள்பட்ட நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடலில் அதீத வலி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us