தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு

முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு

முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விபத்து, பக்கவாதம், மாரடைப்பு சிகிச்சை பெறும் முன் செய்ய வேண்டியவை, கூடாதவை பற்றி விளக்குகிறார், அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் டாக்டர் கருப்புசாமி.

தீவிர அவசர சிகிச்சை பிரிவின் பணிகள்?

மூளைக்கு ரத்த ஓட்டம் 30 வினாடிகள், 1 நிமிடம் வரை செல்லாமல் இருந்தால், மூளை நரம்புகள் பாதிக்கப்படும். இதயத்திற்கு 5 நிமிடம் ரத்தம் செல்லாமல் இருந்தால் மாரடைப்பு வரும். சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்காமல் அடுத்தகட்ட சிகிச்சையை உடனே துவங்குவதே, தீவிர சிகிச்சை பிரிவின் முதற்கட்ட பணி.

முதலுதவியின் போது சிலர் செய்யும் தவறுகளால் வேறு பிரச்சனைகள் வந்து விடுகின்றனவே?

* உண்மைதான். விபத்தில் காயமடைந்தவர்கள் குப்புற அல்லது ஒருபக்கமாக கிடந்தால், அவர்களை நேராக படுக்க வைப்பதாக கருதி சிலர் அவசரத்தில் கழுத்து நரம்புகளை அழுத்தி விடுவர். இதனால், கழுத்தில் இருந்து கை, கால்களுக்கு செல்லும் நரம்புகள் பாதித்து, செயலிழக்கலாம்.

* ரத்தம் வெளியேறிக் கொண்டே இருந்தால் சிலர் மஞ்சள்துாள், மண் வைப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இது தவறு. ஒரு துணியை அவ்விடத்தில் வைத்து 30 நிமிடம் வரை அழுத்திபிடித்தால் போதும்.

* சிலர் குழந்தைகள் மண்ணெண்ணெய் குடித்துவிட்டால், கை விட்டு வாந்தி எடுக்க வைக்கின்றனர். அப்படி செய்தால், திரவம் நுரையீரலுக்குள் செல்லலாம். ஆசிட், பெட்ரோல், டீசல் போன்றவை குடித்தால், வாந்தி எடுக்க வைக்கக் கூடாது.

* விஷப்பூச்சிகள் கடித்தால், அவ்விடத்தை அசைக்காமல், உடலுக்கு இயக்கத்தை கொடுக்காமல், மருத்துவமனைக்கு வர வேண்டும். சிலர் சைக்கிள் மிதிப்பது, ஓடுவது, நடப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவர். இதனால் விஷம் உடல் முழுக்க பரவலாம்.

* குழந்தைகளின் மூக்கு, காதுக்குள் ஏதாவது பொருள் சென்றால், உடனே தலைகீழாக தொங்கவிட்டு முதுகை தட்டுவர். அப்பொருள் தொண்டையில் இருந்தால் மட்டுமே வெளியேறும். தவறாக சிகிச்சை அளித்தால் மூச்சுக்குழாய்க்குள் சென்று சுயநினைவு இழக்கலாம். வேகமாக தட்டுவதால் எலும்பு முறிவு ஏற்படலாம். எதையும் செய்யாமல், உடனே ஆம்புலன்சுக்கு அழைத்து மருத்துவமனையில் அனுமதிப்பதே சிறந்தது.

எமர்ஜென்சி பிரிவில் சந்திக்கும் சவால்கள் என்ன?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு மருந்து எடுத்து கொள்ளாத போது, உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கும். நரம்புகள் பாதித்தாலும் அறிகுறியை வெளிப்படுத்தாது. இவர்கள் நோயின் இறுதி நிலையில் வந்தால் காப்பாற்றுவது கடினம்.



பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் பழைய நிலைக்கு திரும்புவது அரிதாவது ஏன்?


''மாரடைப்பு ஏற்பட்டால் உடனே உயிரிழக்கலாம் என்பதால் மக்கள் அறிகுறி தெரிந்ததும் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால் பக்கவாதம் மூளை செயல்திறனை பாதித்தாலும் உயிர் போகாது என்பதால், ஒருநாள் கழித்து சிகிச்சைக்கு வருவோரும் உண்டு. பக்கவாத அறிகுறி என்பதே ஒருபக்க கை, கால், முகம் செயல்படாத நிலை. இதை உணரும் முதல் நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். தற்போது உயர்ரக மருந்துகள், அதிநவீன சிகிச்சை முறை உள்ளது,''

டாக்டர் கருப்பசாமி

karuppunandhisamy@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us