தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வெளியில் வாங்க... வெயிலில் நடங்க! தள்ளாத வயதில் தளர்ச்சி இருக்காது என்கிறார் டாக்டர்

வெளியில் வாங்க... வெயிலில் நடங்க! தள்ளாத வயதில் தளர்ச்சி இருக்காது என்கிறார் டாக்டர்

வெளியில் வாங்க... வெயிலில் நடங்க! தள்ளாத வயதில் தளர்ச்சி இருக்காது என்கிறார் டாக்டர்


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திடீரென ஒருநாள் மரநாற்காலியில் அமர்ந்து, இயல்பாக எழ முடியாமல் தவிக்கும் போது, கண்கள் இருளும். வயதாகிவிட்டதாக மனம் ஆறுதல் சொல்லும். ஆனால் இதை அலட்சியப்படுத்தக்கூடாது என்கிறார், அரசு மருத்துவமனை இதய நோய் பிரிவு துறைத்தலைவர் டாக்டர் நம்பிராஜன்.

அவர் கூறியதாவது:

வயதாவதால் வரும் சோர்வு, பலவீனம், சிறிய பொருளை எடுக்கக்கூட சிரமப்படுதல், நடக்கும் போதே உடல் சமநிலையை இழப்பது, நாற்காலியில் உட்கார்ந்து எழ முடியாதது, மாடிப்படி ஏற சிரமப்படுவது போன்றவற்றை அலட்சியப்படுத்த கூடாது.

இது, 40ல் துவங்கி 60 வயதில் தீவிரமாகும். வயது முதிர்வால் உடலில் உள்ள எலும்பு தசைகள் குறைந்து, அதன் வலிமை, செயல்திறன் படிப்படியாக குறைந்து வருவதால்தான் இப்பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவ மொழியில் இதற்கு 'சார்கோபீனியா' (Sarcopenia) என்று பெயர்.

யாருக்கு வரும்?

தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்தல், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, தசை வளர்ச்சிக்கு தேவையான புரதம், விட்டமின் டி ஆகியவற்றை உணவில் சரியாக சேர்த்து கொள்ளாமை, வளர்ச்சி ஹார்மோன் அளவு குறைவது போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

சர்க்கரை, சிறுநீரக நோய்கள், புற்றுநோய் போன்ற பாதிப்புகள், தசை சிதைவை விரைவுப்படுத்தும். எனவே அறிகுறி தென்பட்டதும் சிகிச்சையை துவங்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

தசை, எலும்புகளின் அடர்த்தியை அளவிடும், டெக்சா ஸ்கேன் எடுப்பதோடு, மருத்துவரின் பரிந்துரைப்படி பயிற்சி, மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம்.

அதிக புரதச்சத்து மிகுந்த பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி உட்கொள்ள வேண்டும். எலும்பு, தசை ஆகிய இரண்டும் வலு பெற, கால்சியம், விட்டமின் டி அவசியம். வெயிலில் உடலை காட்டினாலே விட்டமின் டி போதுமான அளவு கிடைக்கும். இதை தொடர்ந்து செய்தால், தள்ளாத வயதிலும் தளராமல் நடக்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us