sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு


PUBLISHED ON : ஆக 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

5 மே 2016:



அன்று வார விடுமுறை என்பதால், வீட்டில் அனைவரும், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் உதவியாளர் ராஜா, என்னை தொலைபேசியில் அழைத்தார். 'சார், ஷாப்பிங் மாலில் சித்ராவை பார்த்தேன்' என்று சொல்லும்போதே குரலில் அத்தனை உற்சாகம் அவருக்கு. நானும், 'ரொம்ப சந்தோஷம்; நாளை நேரில் பேசலாம்' என்று தொலைபேசியை துண்டித்தேன். சித்ராவை சந்தித்த நாள் நினைவில் வந்தது. மூன்று மாதங்களுக்கு முன், நான் பணிபுரிந்த மருத்துவமனைக்கு சித்ராவை வீல் சேரில் அழைத்து வந்தனர்; அவரால் நடக்கவே முடியவில்லை. சித்ரா பள்ளிக்கூட ஆசிரியை. முதுகு மற்றும் அடிவயிறு பகுதியில் தாங்க முடியாத வலி இருப்பதாகச் சொன்னார். நான் அவரை பரிசோதித்தேன். அவருக்கு முதுகுத் தண்டுவடத்தில், எல்4 மற்றும் எல்5 எனும் எலும்பு சவ்வில் வீக்கம் இருந்ததால் முதுகு வலியும், 'எண்டோமெட்ரோசிஸ்' பாதிப்பால், அடிவயிற்றில் வலியும் சேர்ந்து இருந்தது. இது சினைப்பையை தாக்கும் ஒரு விதமான நோய். இப்பாதிப்பு இருந்தால், மாதவிடாயின் போது, அதிக வலி இருக்கும். இந்த இரு பிரச்னைகளுக்கும் சேர்த்து, 'ரோபோடிக் அசிஸ்டென்ஸ்' மூலம், முதுகுத்தண்டுவட எலும்பு வீக்கத்தால், நரம்புகளில் ஏற்பட்ட அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், எண்டோமெட்ரோசிஸ் பாதிப்புக்கும் சேர்த்து, தேவையான மருந்தை செலுத்தியதும் வலி குறைந்ததை உணர்ந்தார். இந்த சிகிச்சையின் போது, உள் நோயாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. புற நோயாளிகள் பிரிவிலேயே சிகிச்சை பெற்று, அன்றே வீட்டிற்கு திரும்பி விடலாம்.

உணவு பழக்கம், பணி நெருக்கடி, ஒரே இடத்தில் உட்கார்ந்து பல மணி நேரம் கணினியில் வேலை போன்ற பல வாழ்க்கை முறை மாற்றங்களால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதற்கு தொடர்ந்து வலி நிவாரணிகளை கொடுத்தால் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உள்உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அவை செயல்திறன்களை இழக்கும் ஆபத்து இருப்பதால், வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள, 'ரோபோடிக் அசிஸ்டென்ஸ்' முறையை, தற்போது இங்கும் பயன்படுத்துகிறோம். ஐந்தாண்டுகளுக்கு முன் வரை, இதுபோன்ற பிரச்னைகளுக்கு, திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் குணமடைய தேவைபடும் நாட்கள் அதிகம். அதோடு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் பொருளாதார சிக்கல் போன்றவை இருந்தன. இதனால், நோயாளி அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. நவீன சிகிச்சை முறையில், இதற்கெல்லாம் எளிய தீர்வு கிடைத்திருக்கிறது என்பதற்கு, சித்ராவே சாட்சி. ஷாப்பிங் மட்டுமல்ல, சித்ராவால் உலக சுற்றுலாவே செல்ல முடியும் என, நினைத்து சந்தோஷப்பட்டேன்.

ர.மதன்குமார், வலி நிவாரண சிறப்பு சிகிச்சை நிபுணர்,

குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை.

96007 59402

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us