PUBLISHED ON : நவ 02, 2016

செப்டம்பர், 7, 2016: நாராயணனை நான் முதலில் பார்த்த போது, சில அடி துாரம் கூட அவரால் நடக்க முடியவில்லை. ஒரு அடி எடுத்து வைத்தாலும் மார்பு பகுதியில் பயங்கர வலி இருப்பதாக கூறினார். சிறு வயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பால், இடது கால் செயலிழந்திருந்தது.
தற்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை, அவருடைய இதயத்தில் மூன்று ரத்தக் குழாய்களில் (blood vessels) 100 சதவீதம் அடைப்பு இருந்தது.
ஏற்கனவே இடதுகால் செயலிழந்த நிலையில், வலதுகால் தொடைப் பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் துளையிட்டு, இதய வால்வில் உள்ள அடைப்பை சரி செய்யும் ஆபரேஷன் செய்து கொள்வது பற்றி அவருக்கு தயக்கம் இருந்தது. வலதுகாலுக்கு பாதிப்பு இல்லாமல், 'minimal invassive' முறையில் ஆபரேஷன் செய்ய முடியுமா என்று, பல மருத்துவமனைகளை அணுகியிருக்கிறார். இதனாலேயே மூன்று ஆண்டுகள் ஆபரேஷன் செய்து கொள்வதை தள்ளிப் போட்டிருந்தார்.பத்து ஆண்டுகளுக்கு முன், இதய ரத்த நாளத்தில், 100 சதவீதம் அடைப்பு இருந்ததால், அறுவை சிகிச்சை இல்லாமல் சரி
செய்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒரு ரத்த நாளத்தில் அடைப்பு இருந்தாலும், 'பைபாஸ் சர்ஜரி' செய்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இன்று, நிலைமை அப்படியில்லை. ஜப்பானிய தொழில்நுட்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளையும், 'ஆஞ்சியோ பிளாஸ்டி' மூலமே சரி செய்ய முடியும்.முதல் முறையிலேயே, நாராயணனுக்கு, அவருடைய இதயத்தின் மூன்று ரத்தக் குழாய்களில் இருந்த, 100 சதவீத அடைப்பும் ஆஞ்சியோ பிளாஸ்டி முறையிலேயே நீக்கப்பட்டது. இதற்கென்று பிரத்யேகமாக ஒயர்கள், கதீட்டர்கள், பலுான்கள் உள்ளன. ஆஞ்சியோபிளாஸ்டி செய்த இரண்டு நாட்களிலேயே நாராயணன், 'டிஸ் சார்ஜ்' செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களில், வழக்கமான வேலைகளை அவரால் தொடர முடிந்தது. தற்போது நடக்கும் போது வலி எதுவும் இல்லை. 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்வதற்கு முன் 15 வகையான மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருந்தது. தற்போது மூன்று வகையான மாத்திரைகளை மட்டுமே சாப்பிடுகிறார்.
ஆனந்த் ஞானராஜ்
இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்
அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி, வானகரம்
98402 28351
