PUBLISHED ON : நவ 09, 2016

அக்., 30, 2016: வினோத், ஐந்தாவது படிக்கிறான். அப்பா, தினேஷ்; வங்கி அதிகாரி. அம்மா, மாலா; தனியார் பள்ளி ஆசிரியை. வினோத்தை நினைத்துதான் இருவரும் கவலைப்பட்டனர். காரணம், 10 வயதான போதும், இன்னும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் மாறவில்லை.
இந்த பழக்கத்தை எப்படி சரி செய்வது என்று தெரியாமல், வினோத்தை அழைத்துக் கொண்டு என்னிடம் வந்தனர்.படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம், குழந்தைகளுக்கு இரண்டரை வயதில் சரியாகி விடும். ஐந்து வயதிற்கு மேல் இந்தப் பழக்கம் தொடர்ந்தால், அது பிரச்னை. 20 சதவீத
குழந்தைகளுக்கு, ஆறு வயது வரை இந்தப் பழக்கம் இருக்கிறது. இந்தப் பழக்கத்திற்கு, 90 சதவீதம் மரபியல்தான் காரணம். குழந்தையின் பெற்றோருக்கு, எந்த வயது வரை படுக்கையை நனைக்கும் பழக்கம் இருந்ததோ, அந்த வயது வரை குழந்தைக்கும் இருக்கும். சில குழந்தைகளுக்கு bladder control தாமதமாகத்தான் வரும். துாக்கத்தில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு, 'நாக்டோர்னல்' (Nocturnal) என்று பெயர். விழித்திருக்கும் போது,
கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் போவதற்கு, 'டையூர்னல்' (diurnal) என்று பெயர். சிறுநீர் பையும், அதை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலமும், தாமதமாக வளர்ச்சி அடைவதால் தான், குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் வருகிறது. குழந்தைகள் துாங்கும் போது, சிறுநீர் பை நிறைந்து விட்டால், அதற்கான தகவலை சிறுநீர் பையுடன் கூடிய நரம்புகள், மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. இத்தகவலை பெற்ற மூளை, எழுந்திருக்க வேண்டும் என்ற தகவலை
உடலுக்கு அனுப்புகிறது. ஆனால், உடலானது முழுவதும் எழுந்திருக்க முடியாமல், லேசான அசைவுகளை மட்டும் ஏற்படுத்துவதால், படுக்கையிலேயே சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.சில குழந்தைகளுக்கு, அவர்களின் சிறுநீர் பையானது வேகமாக செயல்படும். அப்போது, அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பர். சிறுநீர் பை முழுதாக நிரம்பும் முன்பே, மூளைக்கு தகவலை அனுப்பி விடுகிறது. இதனாலும், குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றனர்.
குழந்தையின் நடத்தை மற்றும் மனரீதியில் மாற்றங்களை கொண்டு வர, பயிற்சி அளிப்பது ஒன்று தான், இதற்கு தீர்வு.
வெங்கடேசன்,
குழந்தைகள் நல மருத்துவர்.
98402 43833
