தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கேள்வி - பதில்

கேள்வி - பதில்

கேள்வி - பதில்


PUBLISHED ON : நவ 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

வயது, 40. கடந்த பல ஆண்டுகளாக, தினமும், என் உணவில் முட்டை இருக்கும். ஒரு கிலோ இறைச்சியில் இருக்கும் அளவிற்கு, கொழுப்புச் சத்து ஒரு முட்டையில் இருக்கிறது. அதனால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் முட்டை சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுகிறது. முட்டை பிரியனான என்னால், முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்வது?

எஸ்.சுகுமார்,வத்தலக்குண்டு

இத்தனை வயதிற்கு மேல், முட்டை சாப்பிடக் கூடாது என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு முட்டையில், 77 கலோரிகள் உள்ளன. இதில், 6 கிராம் புரதம் உள்ளது. புரதமும், அமினோ அமிலமும் உடலின் செல் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று. முட்டையில் இயற்கையாகவே, வைட்டமின் பி 12, ரிபோபிளாவின் போன்ற நினைவாற்றலை மேம்படுத்தும் நுண்ணுாட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கும், பாலுாட்டும் தாய்மார்களுக்கும், இது முக்கியத் தேவை. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பு, 5 சதவீதம் முட்டையில் உள்ளது. கண்புரை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும், 'ஆன்டி ஆக்சிடென்ட்' உள்ளது.எலும்பு வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் டி, தோலுக்கு அவசியமான வைட்டமின் ஈ, ரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சிக்கு ஆதாரமான இரும்புச் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஜிங்க் முட்டையில் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில், கொழுப்புச் சத்து மட்டும், 90 சதவீதம் இருப்பதால், குறிப்பிட்ட வயதிற்கு மேல் முட்டையைத் தவிர்க்கச் சொல்கின்றனர். ஆனாலும், இந்த கொழுப்புடன் சேர்ந்து நிறைய நுண்ணுாட்டச்சத்துக்களும்

உள்ளன. இதய நோய், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கருவை தவிர்த்து, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

காலை உணவில், தொடர்ந்து எட்டு வாரங்கள் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்பது, என் சொந்த அனுபவம். அதிக உடல் எடை உள்ளவர்கள், இதை பின்பற்றலாம். நிறைய மசாலா, எண்ணெய் சேர்த்து முட்டையை சமைக்காமல், அப்படியே வேக வைத்தோ அல்லது கொதிக்கும் நீரில் முட்டையை தட்டி ஊற்றி நன்றாக வெந்த பின் சாப்பிடலாம்.செல் சுவர்களை உருவாக்கும் மூளை வளர்ச்சிக்கு பயன்படும், கோலின் (CHOLINE) என்ற நுண்ணுாட்டச்சத்தும் முட்டையில் உள்ளது. ஒரு மஞ்சள் கருவில், 185 மில்லி கிராம் கொழுப்பு சத்து உள்ளது. இளம் வயதினர் தினமும், 300 மில்லி கிராம் கொழுப்பு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இயற்கை மருத்துவர்கள் சிலர் முட்டையை தவிர்க்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் சில காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அதற்கு, அறிவியல்பூர்வமான எந்த ஆதாரமும் கிடையாது. பெண்களும், குழந்தைகளும் தினமும் காலையில் ஒரு முட்டை அல்லது குறைந்தது வாரத்திற்கு, 5 நாட்கள் முட்டை அவசியம்

சாப்பிட வேண்டும்.

சுபத்ரா சுந்தர்.

ஊட்டச்சத்து நிபுணர், கங்கா மருத்துவமனை, கோவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us