தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு

டாக்டரின் டைரி குறிப்பு


PUBLISHED ON : பிப் 01, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி, 2, 2017: நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜெயாவுக்கு, 54 வயதாகிறது. அவரது கணவன் வங்கி மேலாளர். இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பெண்ணுக்கு திருமணம் முடித்தாகிவிட்டது. மகனுக்கு, திருமணம் செய்ய வேண்டிய வயது. இன்னும் சில கடமைகள் இருக்க, ஜெயாவின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். ஆறு மாதத்தில், 20 கிலோ எடை குறைந்தார். மூச்சுத் திணறல் பிரச்னையும் இருந்தது. எனவே இதய நிபுணர், புற்றுநோய் நிபுணர் என, பல மருத்துவர்களை சந்தித்து, பல பரிசோதனைகள் செய்தும் ஏதும் கண்டறிய முடியவில்லை.

கடைசியில், என்னை சந்திக்க வந்தார்கள். எக்கோ எனும் இதயத்திற்கான, 'ஸ்கேன்' பரிசோதனை செய்தோம். அதில், ஜெயாவின் இதயத்தசை கடினமாகியிருந்தது தெரியவந்தது. கூடவே, ஈ.சி.ஜி., பரிசோதனை செய்ததில், சில மாறுதல்கள் தெரிந்தது. இப்பிரச்னைகள் இருந்தும் ரத்த அழுத்தம் சீராக இருந்தது. இதனால் இதய துடிப்பு சீராக இருப்பதற்காக, 'பேஸ் மேக்கர்' எனும் கருவி தேவைப்படலாமா என ஆலோசித்தோம். ஜெயாவுக்கு உள்ள பாதிப்பை, அமிலாய்டோசிஸ் Amyloidosis பாதிப்பு என்பர். அதாவது, அதீத புரதம் உடலில் சேர்ந்துவிடுவது. ஜெயாவுக்கு, இதயத்தில் சேர்ந்துவிட்டது. இவ்வகையான பிரச்னை ஏற்படுவது அரிது. அமிலாய்டோசிஸாக இருக்குமோ என சந்தேகித்து, எம்.ஆர்.ஐ., செய்ததில், அதற்கான அறிகுறிகள் தெரிந்தது. இதை உறுதிப்படுத்தும் மருத்துவரும், சென்னையில் ஒருவர் தான் இருக்கிறார். எனவே, வயிற்றிலுள்ள திசுக்களை எடுத்து பயாப்சி செய்தோம்; முடிவு, பிரச்னை இல்லை என்றது. எனவே திருப்தியடையாமல் ஆசனக் குடல் திசுக்களை எடுத்து, பயாப்சி பரிசோதனை செய்தோம்; அதில் இப்பிரச்னை உறுதியானது. இதற்கான சிகிச்சைகளை புற்றுநோயாளிக்கு அளிப்பது போல் தான் செய்ய வேண்டும். எனவே ரத்தம் மற்றும் புற்று நோய் நிபுணர் மற்றும் நானும் இணைந்து, கீமோதெரபி சிகிச்சை அளித்து வருகிறோம். சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்கிறது. அவரிடம், ஒரு வாரத்திலேயே நல்ல மாறுதல் தெரியவந்தது. ஈ.சி.ஜி.,யில் இருந்த மாறுதல்கள் இப்போ சீராக ஆரம்பித்துவிட்டன. இவரை சந்தித்து, ஒரு மாதம் தான் ஆகிறது. இது மாதிரியான பிரச்னைகளை கண்டுபிடிப்பதில் தான், மருத்துவரின் புத்திசாலித்தனமே அடங்கியுள்ளது. தற்போது ஜெயாவுக்கு, ஆறு முதல் எட்டு மாதம் வரையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இன்னும் சில மாதங்களில், ஜெயா பூரண நலம் பெற்றுவிடுவார்.

எம்.எம்.யூசுப்

நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

82206 69911


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us