sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/வடிகட்டும் திறனைக் குறைக்கும் வலி நிவாரணி!

வடிகட்டும் திறனைக் குறைக்கும் வலி நிவாரணி!

வடிகட்டும் திறனைக் குறைக்கும் வலி நிவாரணி!


PUBLISHED ON : அக் 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பெயின் கில்லர்' மாத்திரைகளை தொடர்நது பயன்படுத்தும் போது, வயிற்றை நேரடியாக பாதிப்பதுடன், பல பிரச்னைகளையும் தரும். 'பாராசிட்டமால்' மாத்திரைகளை மட்டும், அதுவும் டாக்டர் பரிந்துரைக்கும் அளவில் வலி நிவாரணியாக பயன்படுத்தலாம்.

'புரூபன், ஓவிரான்' போன்ற மற்ற வலி நிவாரணிகளை பயன்படுத்தும் போது, சிறுநீரகங்களை பாதிக்கும். கொரோனா காலத்தில், மருத்துவ ஆலோசனை இல்லாமல், வலி நிவாரணிகளை வாங்கி சாப்பிட்ட பலருக்கும், சரி செய்யவே முடியாத அளவிற்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன.

சிறுநீரில் 'கிரியாட்டின்' அளவு பெண்களுக்கு எத்தனை வயதானாலும், எவ்வளவு உடல் எடை இருந்தாலும், ஒரு லிட்டருக்கு 0.7 மி.கி., என்ற அளவிலும், ஆண்களுக்கு 1 மி.கி., வரை இருக்கலாம்.

பரிசோதனைக் கூடத்தில் தரும் ரிப்போர்ட்டில், நமக்கு எவ்வளவு இருக்கிறது, எந்த அளவு இருக்கலாம் என்று அடுத்தடுத்து குறிப்பிட்டு இருப்பர். அதில், 1.4 மி.கி., வரை இருக்கலாம் என்று இருக்கிறது; இது தவறானது. கிரியாட்டின் அளவு இவ்வளவு இருக்கலாம் என்று சர்வதேச அளவில் எந்த அளவும் நிர்ணயிக்கப்படவில்லை.

அந்தந்த பரிசோதனை கூடத்தில் உள்ள கருவிகள், பரிசோதிக்கும் முறையைப் பொருத்தும் இது மாறுபடலாம் என்று தான் சர்வதேச அளவில் விதி உள்ளது.

சிறுநீரகங்களுக்கு ஒரு நிமிடத்திற்கு 120 மில்லி ரத்தம் செல்ல வேண்டும்; வயதானால் இது தானாகக் குறையும். 90 வயதுள்ள ஒருவருக்கு 70.80 மில்லி தான் ரத்தம் செல்லும். 120 மில்லி கழிவுகள் சிறுநீரகத்தால் வடிகட்டப்படும். தொடர்ந்து வலி நிவாரணிகளை சாப்பிடும் போது, சிறுநீரகங்களின் வடிகட்டும் தன்மை குறைந்தபடியே வரும்.

கழிவுப் பொருட்களை வெளியேற்றும் வேலையுடன், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களை சமன் செய்வது, அதிக பொட்டாசியத்தை வெளியில் அனுப்பி சோடியத்தை தேவையான அளவு தக்க வைப்பது போன்றவைசிறுநீரகங்களின் வேலை.

தேவைக்கு அதிக வலி நிவாரணிகளின் பயன்பாடு, சிறுநீரகங்களின் செயல்பாட்டை நாளடைவில் பாதிக்கும்.

டாக்டர் தமிழ்செல்வம்,

மூட்டு முடக்கவியல் சிறப்பு மருத்துவர்,சென்னை.97894 81143

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us