sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

படபடக்கும் இதயம்; அமைதிப்படுத்தும் சாதனம்!

/

படபடக்கும் இதயம்; அமைதிப்படுத்தும் சாதனம்!

படபடக்கும் இதயம்; அமைதிப்படுத்தும் சாதனம்!

படபடக்கும் இதயம்; அமைதிப்படுத்தும் சாதனம்!


PUBLISHED ON : மார் 23, 2025

Google News

PUBLISHED ON : மார் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மன அழுத்தம், உடற்பயிற்சி, அளவுக்கு அதிகமாக காபி உட்பட காபின் கலந்த பானங்கள் குடிப்பதால், இயல்பைவிட வேகமாக இதயம் துடிக்கலாம்.

அதே நேரம் ஓய்வாக இருக்கும் போதும், இதயம் நிமிடத்திற்கு 100 முறைக்கு மேல் துடித்தால், 'டாக்கி கார்டியா' எனப்படும் தீவிர இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மூச்சுத் திணறல், தலை சுற்றல், மார்பு வலி போன்ற அறிகுறிகளுடன் இதயத் துடிப்பு குறையாமல் இருந்தால், இதயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்வது அவசியம். சிகிச்சை பெறுவதில் தாமதம் செய்தால், பக்கவாதம், இதயச் செயலிழப்பு, மாரடைப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்; உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம்.

இயல்பைவிட வேகமாக இதயம் துடித்தால், அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

இந்நிலையில், இதய அறைகளுக்கு ரத்தம் செலுத்தவோ, உடலின் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை செலுத்தவோ போதுமான நேரம் அதற்கு இருக்காது. இதயத் துடிப்பைத் துாண்டும் மின் அலைகள் ஒழுங்கற்ற முறையில் செயல்படும்.

உடனடியாக சரி செய்யாவிட்டால், குறைந்த ரத்த அழுத்தம், நினைவு இழப்பு, உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

அறிகுறிகளை வைத்து, டாக்கி கார்டியா இருக்கலாம் என்று தெரிந்தால், எலக்ட்ரோ கார்டியோகிராம் எனப்படும் ஈசிஜி பரிசோதனை செய்தால், இதயத்தின் மின் செயல்பாட்டை அறியலாம். பிரச்னை இருந்தால், மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்யலாம். தீவிர கோளாறு என்றால், ஐசிடி எனப்படும் சிறிய சாதனத்தை அறுவை சிகிச்சை மூலம் மார்பில் பொருத்தலாம். இது, ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை தொடர்ந்து சரி செய்யும்.

வேறு பல உடல் கோளாறுகள் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இப்பிரச்னையை அதிகமாக காண முடிகிறது.

டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன்

மூத்த இதய நோய் மற்றும் இதய மின் இயற்பியல் நிபுணர்,அப்பல்லோ மருத்துவமனை, சென்னை99622 52500consult@drkarthigesanclinic.com






      Dinamalar
      Follow us