தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அதிசயம்!

தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அதிசயம்!

தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அதிசயம்!


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அளவுக்கு அதிகமாக மது குடிப்பதால், கல்லீரல் பிரச்னை வருவதாக பொதுவாக நினைக்கிறோம். கல்லீரல் செயலிழப்பிற்கு முதன்மை காரணம், 'பேட்டி லிலர்' எனப்படும் கல்லீரலில் கொழுப்பு படிவது.

முறையான உடற்பயிற்சி இல்லாதது, திட்டமிடாத வேலை நேரம், பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகள் போன்ற தற்போதைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை மாற்ற பழக்கத்தால், கொழுப்பு அளவில் மாற்றம், சர்க்கரை கோளாறு போன்ற பிரச்னைகள் வருகின்றன.

அதிகப்படியான கொழுப்பு, உடலின் பல பாகங்களிலும் சேரும். இது, கல்லீரலில் சேரும் போது, அதன் செல்களை செயலிழக்கச் செய்கிறது. நாளடைவில் முற்றிலும் அழிந்து தழும்பாக, 'சிரோசிஸ்' என்ற நிலையை அடைகிறது.

குறிப்பிட்ட நிலை வரை, செயலிழந்த செல்களை, தானே சரி செய்யும் திறன் கல்லீரலுக்கு இருப்பதால், ஆரம்ப நிலையில் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. வேறு ஏதாவது பிரச்னைக்காக ரத்த, 'அல்ட்ரா சவுண்டு' பரிசோதனை செய்தால் தான், பேட்டி லிவர் இருப்பது தெரியும். அப்படி இல்லாத பட்சத்தில், நோய் முற்றிய நிலையிலேயே வெளியில் தெரியும்.

குறைந்த கார்போ ஹைட்ரேட், அதிக புரதம், காய்கறிகள், பழங்கள் தினசரி உணவில் இடம் பெறுவது, வாரத்தில் ஐந்து நாட்கள் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை, ஒரு நாளில் 30 - 45 நிமிடங்கள் செய்வது, கல்லீரல் கொழுப்பு படிவதை தடுக்கும்.

உலகம் முழுதும் உடல் பருமன் பெரிய சவாலாக உள்ளது. ஆனால் நம்மைப் பொறுத்தவரை, உடல் பருமன் இல்லாமல், உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தாலும், பேட்டி லிவர் பிரச்னையை ஏற்படுத்தும் என்.ஏ.எப்.எல்.டி., மரபணு உள்ளது. ஆரம்பத்தில் கண்டறிந்து சரி செய்யாவிட்டால், கல்லீரல் மாற்று ஒன்று தான் இதற்கு தீர்வு.

பாதங்களில் வீக்கம், சோம்பல், வயிற்றில் நீர் சேருவது, துாங்கும் நேரத்தில் மாற்றம், நினைவிழப்பு, குழப்பமான மனநிலை, ரத்த வாந்தி, கறுப்பு நிறத்தில் மலம், சில சமயங்களில் ரத்தத்துடன் மலம் கழிவது போன்றவை இதன் அறிகுறிகள். 'சிரோசிஸ்' என்ற நிலையில், கல்லீரலில் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம். எனவே கட்டிகள் இருந்தால், ஆரம்ப நிலையிலேயே அகற்ற வேண்டும்.

சில சமயங்களில், சிரோசிஸ் என்ற நிலையை எட்டுவதற்கு முன்பேகூட கேன்சர் வரலாம். கேன்சர் பாதிப்பு, 70 சதவீதம் இருந்தாலும், பாதித்த பகுதியை அகற்றிய பின், பிரச்னை இல்லாமல் வாழ முடியும். ஆனால், முழுதுமாக செயலிழந்து விட்டால், உறுப்பு மாற்று ஒன்று தான் வழி.

டாக்டர் முகமது ரேலா,

கல்லீரல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,

ரேலா மருத்துவமனை, சென்னை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us