தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய வழி

ஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய வழி

ஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய வழி


PUBLISHED ON : நவ 29, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணுவது,

தூக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், ரத்தசோகை இருப்பதை அறியலாம்.

உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, அந்த அணுக்கள் குறைந்த ரத்தம், உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை. உடல் களைப்பு அடைகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, உண்ணும் உணவில் இருந்து தான், எடுத்துக் கொள்ளுகிறது.

எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து, வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின், 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு, 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராமுக்கு கீழே குறையும்போது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு, சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்சிஜனை, ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை, கார்பன்டை ஆக்ஸைடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி, உடலுக்கு சக்தியூட்டுகிறது.

நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை, ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவற்றை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. ஹீமோகுளோபின் அதிகரிக்க மருத்துவம் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு, எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி, ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை, 6:00 மணிக்கு போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும்.

காலையில், 6:00 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம், 12:00 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை, 6:00 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்று விட்டு, மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி, தினசரி ஒரு திராட்சை வீதம், ஒரு வேளைக்கு அதிகப்படுத்தி, ஒன்பது நாட்கள் வரை சாப்பிட வேண்டும். பின், ரத்தத்தை பரிசோதித்தால் மாற்றம் இருப்பதை அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us