தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/'பேரன்பு' குழந்தைகளுக்கு 'ஸ்டெம் செல்' தரும் தீர்வு!

'பேரன்பு' குழந்தைகளுக்கு 'ஸ்டெம் செல்' தரும் தீர்வு!

'பேரன்பு' குழந்தைகளுக்கு 'ஸ்டெம் செல்' தரும் தீர்வு!


PUBLISHED ON : மார் 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தில், ஆயிரக்கணக்கானகுழந்தைகள், மூளை மற்றும் அது சார்ந்த நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.குறிப்பாக, பெரு மூளை முடக்கு வாதம், முதுகுத்தண்டு கோளாறு, 'ஆட்டிசம், மஸ்குலார் டிஸ்ட்ரோபி, ஸ்ட்ரோக்' போன்றவை... இதற்கு சிகிச்சையே இல்லை என்று நினைக்கிறோம்; ஆனால், இது போன்ற குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கு, பேச்சு பயிற்சி, சுய தேவைகளை, தாங்களே செய்து கொள்ள, தேவையான பயிற்சி உட்பட பல்வேறு வகைகளிலும், ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகவும் அவசியம்.

மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால், இந்த அணுகுமுறையும் ஓரளவிற்கே பலன் தருகிறது. அதனால் தான், பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில், எலும்பு மஜ்ஜையிலிருந்து பிரித்தெடுக்கப்படும், 'ஸ்டெம் செல்' எனப்படும் மூல செல்களை கொண்டு செய்யப்படும் புதிய சிகிச்சையை துவக்கியுள்ளோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 'ஸ்டெம்' சிகிச்சை என்பது புதிதல்ல. சென்னை, திருச்சி உட்பட, பல நகரங்களில் உள்ள, மருத்துவமனைகளில் செய்கின்றனர். நாங்கள், இந்த சிகிச்சை முறையையே புதிய கோணத்தில் அணுகுகிறோம்.

புதிய அணுகுமுறை ஏன் அவசியம்?



நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். நம் நாட்டில் மட்டும் ஒரு லட்சம் குழந்தைகள், 'மூளைக்' கோளாறால், குறிப்பாக, பெரு மூளை முடக்குவாதம் எனப்படும், 'செரிபிரல் பால்சி'யால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

'செரிபிரல் பால்சி' என்பது என்ன?



பிறவியிலேயே மூளையில் ஏற்படும் அழிவு. மூளை செயலிழந்தால், அதை சரி செய்வதற்கு நிரந்தர சிகிச்சை எதுவும் கிடையாது. ஆனால், 'ஸ்டெம் செல்' சிகிச்சையால், முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், நிலைமையை மேம்படுத்த முடியும்.

'ஸ்டெம் செல்' என்பது என்ன?



முதுகு தண்டுவடத்தின் உள்ளே உள்ள செல்கள் தான், 'ஸ்டெம் செல்கள்'. பசுமையான தண்டை எடுத்து, மண்ணில் ஊன்றி, தேவையான உரம், தண்ணீர் ஊற்றினால், எப்படி அதிலிருந்து புதிய கிளைகள் உருவாகுமோ, அது போல, உடலில் பாதிக்கப்பட்ட இடத்தில், 'ஸ்டெம் செல்'லை செலுத்தும் போது, அங்கு புதிய செல்கள் உருவாகும். பாதித்த கல்லீரலில் செலுத்தினால், கல்லீரல் செல்கள் உருவாகும்; மூட்டுக்களில் செலுத்தும் போது, அந்த இடத்தில் உள்ள செல்களை துாண்டி, புதிய செல்கள் உருவாகும்.

சர்க்கரை கோளாறால், பாதங்களில் ஏற்படும் புண்ணை சரி செய்ய, இம்முறையை முயற்சி செய்கின்றனர். எலும்பு முறிவு, வழக்கான சிகிச்சையால், சரியாகாத பட்சத்தில், எலும்பு மஜ்ஜையிலிருந்த, 'ஸ்டெம் செல்'லை எடுத்து, முறிந்த இடத்தில் செலுத்தி, முறிவை சரி செய்ய முடியும். இதைப் போலவே, மூளையில் ஏற்பட்ட அழிவை சரி செய்ய, இந்த முறையை செய்கிறோம்.

குழந்தை பிறந்ததும், தொப்புள் கொடியை வெட்டும் போது,அதிலிருந்து வரும் ரத்தத்தில், ஸ்டெம் செல்கள் உள்ளன. இதனால் தான் நம் முன்னோர்கள், தொப்புள் கொடியின் வெட்டிய பகுதியில் இருந்து சிறிதளவு எடுத்து, காற்றுப் புகாமல் தாயத்தில் அடைத்து, இடுப்பில், அரைஞாண் கயிறாக கட்டி விடுவார்கள். இந்த கயிறு அப்படியே இருக்கும். தீர்க்க முடியாத நோய் வந்தால், தாயத்தின் உள்ளே இருக்கும், தொப்புள் கொடி துகளை, வாயில் போட்டு, விழுங்கச் செய்வார்கள். இதிலிருந்து உருவாகும் புதிய செல்கள் உடல் கோளாறை தீர்க்கும் என்பது நம்பிக்கை.

மூளை பாதிப்பை சரி செய்ய இதுவரையிலும், எந்த மருத்துவ தீர்வும் இல்லை என்பதால், இது மிகவும் நம்பகமானதாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்தே, 'ஸ்டெம் செல்' எடுத்து, சிகிச்சை தருகிறோம்.

சிகிச்சை முறை



இடுப்பு பகுதியில் உள்ள எலும்பு மஜ்ஜையில், ஊசி உதவியுடன் செல்களை எடுத்து, பரிசோதனை கூடத்தில், 'ஸ்டெம் செல்'களைப் பிரித்து, இன்னொரு ஊசி மூலம் மீண்டும் செலுத்துகிறோம். ஒரு நாளில், புற நோயாளியாகவே இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியும்; எளிமையானது; வலியோ, பக்க விளைவுகளோ இருக்காது. நேரடியாக தண்டு வடம், மூளைக்கு சென்று பாதிப்பை சரி செய்கிறது.

இதுவரையில், 1,600 குழந்தைகளுக்கு இது போன்ற சிகிச்சை தந்துள்ளோம். இதன்பின், மெதுவாக முன்னேற்றம் ஏற்பட்டு, ஆறு மாதங்கள் - ஓராண்டிற்குள், தானாக எழுந்து நிற்பதற்கு, நடப்பதற்கு, பேசுவதற்கு முடியும்.'ஸ்டெம்' செலுத்திய பின், குழந்தையை பராமரிப்பது, 'பிசியோதெரபி' செய்ய வேண்டிய முறைகள் குறித்து, அடுத்த ஒரு வாரத்திற்கு பயிற்சி தருவோம். பயிற்சி முடிந்து சென்றால், நாங்கள் சொல்லிக்கொடுத்ததை, ஆறு மாதங்கள் செய்ய வேண்டும்.

அதன்பின், இன்னொரு முறை மூளையை ஸ்கேன் செய்து பார்த்து, நிலைமைக்கு ஏற்ப, தேவையெனில் இரண்டாவது முறை, 'ஸ்டெம்' செலுத்த வேண்டியிருக்கும்.

செலவு



இதற்கு இரண்டு - மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகும். பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு, எங்கள் மையத்தில் இயங்கும், கார்ப்பரேட் சமூக பொறுப்பு அமைப்பினர், நிதி திரட்டி உதவி செய்கின்றனர். பிரதீபா என்ற, 26 வயது இளம் பெண் சிகிச்சைக்கு வந்தார். அது வரையிலும், எந்த வேலையும் தானாக செய்ய முடியாது; பெற்றோர் உதவியுடன் இருந்தார். இந்த சிகிச்சைக்கு பின், நல்ல முன்னேற்றம். கித்தார் இசை கருவி வாசிக்கிறார். சிறப்பு குழந்தைகளால் நடத்தப்படும் உணவகத்தில், வேலை பார்க்கிறார். திருமணம் ஏற்பாடுகளும் பிரதீபாவிற்கு நடக்கிறது.

வெங்கையா, பெரம்பூர்: என் மனைவிக்கு முதல் கர்ப்பம் கருச்சிதைவு ஆகி விட்டது. இரண்டாவது குழந்தை ரோஷன். டாக்டர் கொடுத்த, 'டியூ' தேதிக்கு ஒருநாள் முன், மருத்துவமனையில் சேர்த்தோம். இயல்பான பிரசவம் இருக்கும் என்று சொன்னவர்கள், கடைசி நிமிடத்தில், 'சிசேரியன்' செய்து, குழந்தையை எடுத்தனர். பிறந்த போதே, பெரு மூளை தண்டுவட பாதிப்புடன் பிறந்தான். எளிமையாக இதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில், தமிழில், பேரன்பு என்ற சினிமாவில், மம்மூட்டியின் மகளுக்கு இருப்பதைப் போன்ற பிரச்னை இது.

ஆறு வயது வரை எந்த அசைவும் கிடையாது. படுத்தே இருப்பான். உட்கார வைத்தால் உட்காருவான். இது போன்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ முகாம் நடந்தது. அதில் தான், மும்பை மருத்துவ குழுவினரை சந்தித்தேன்.'ஸ்டெம் செல்' சிகிச்சைக்கு பின், எழுந்து உட்காருகிறான். உணவு பொருட்களை அடையாளம் தெரிகிறது. மொபைல் போனில் பாட்டு கேட்கிறான். எழுந்து நிற்க முயற்சி செய்கிறான்.

இன்னொரு முறை சிகிச்சைக்கு சென்றால், மேலும் நல்ல முன்னேற்றம் தெரியும் என்று நம்புகிறோம். சென்னையில், இன்று இலவச ஸ்டெம் செல் சிகிச்சை முகாம் நடக்கிறது.

தொடர்புக்கு: 98215 29653

டாக்டர் நந்தினி கோகுல் சந்திரன்,

'நியூரோஜென்' மூளை மற்றும் முதுகெலும்பு மையம், மும்பை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us