தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் ஸ்டிராய்டு!

பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் ஸ்டிராய்டு!

பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் ஸ்டிராய்டு!


PUBLISHED ON : மே 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதைத் தொடர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றவர்களை காட்டிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு தாக்கம் அதிகம் இருக்கும். நுரையீரல், சைனஸ் பகுதியில் இந்தத் தொற்று ஏற்படும்.

'இன்புளுயன்சா' எனப்படும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சல் வந்தால், அதற்கு சிகிச்சை பெற்ற சில வாரங்களில், பாக்டீரியா தொற்றால், நிமோனியா வரும் வாய்ப்புகள் அதிகம்.

கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பிட்ட பருவத்தில் பரவும் இன்புளுயன்சா காய்ச்சலும், அதைத் தொடர்ந்து ஏற்படும் இது போன்ற பூஞ்சை தொற்றையும் பார்க்க முடிகிறது. இது, 10 ஆண்டுகளுக்கு முன் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பிரச்னை குறித்து, சர்வதேச அளவில், பல ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. கொரோனாவும் நுரையீரலை பாதிக்கும் வைரஸ். எனவே, இது போன்ற பூஞ்சை தொற்று வரும் வாய்ப்புகள் இதிலும் அதிகம் உள்ளது. தீவிர கொரோனா தொற்றுக்கு தரப்படும் குறிப்பிட்ட சில வகை, 'ஸ்டிராய்டு' மாத்திரைகள் இதற்கு முக்கிய காரணம். இந்த மாத்திரைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுவதால், பூஞ்சை தொற்றை ஏற்படுத்துகிறது.

சிகிச்சையில் இருக்கும் நாட்களில், 'ஐவி' எனப்படும் நரம்புகளின் வழியே மருந்துகள் செலுத்தும் போது, பல நாட்கள் ஒரே இடத்தில் ஊசி குத்தப்பட்டு இருப்பதாலும், பூஞ்சை தொற்று வருகிறது.

தீர்வு என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்கள், சிகிச்சை முடிந்து குணமான, 4 - 6 வாரங்களுக்கு பின், மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பூஞ்சை தொற்று ஆரம்ப நிலையில் இருக்கும் போதே சிகிச்சை செய்வது பாதுகாப்பானது. கண்கள், மூளைக்கு தொற்று பரவினால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடும் நாட்களில், ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து இருக்கும். தீவிர சர்க்கரை நோயாளிகள், தங்களின் ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க வேண்டும்.

இது உயிர் கொல்லி நோய். ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது. பாதித்தவர் சிகிச்சை பெற தாமதமானால், பாதித்த இடத்தில் உள்ள தசைகளை அரித்து விடும். ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தி, ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.

சைனஸ்

சைனஸ் பிரச்னை இருப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதித்தால், சிகிச்சைக்கு பின், அடிக்கடி சைனஸ் பிரச்னை, தலைவலி, மூக்கிலிருந்து நீர் வடிவது, முகத்தில் வலி போன்ற பிரச்னைகள் இருந்தால், அவசியம் பரிசோதனை செய்ய வேண்டும். சர்க்கரை கோளாறு இல்லாத, தீவிர கொரோனா பாதிப்பு இருந்தாலும் பூஞ்சை தொற்று வரலாம்.

எல்லாருக்கும் வெளியில் அறிகுறிகள் தெரிய வேண்டும் என்பதில்லை. தொற்று இருக்கிறதா, இல்லையா என்பது சாதாரணமாக சொல்வது சிரமம். அதற்கான பரிசோதனை செய்தால் தெரியும். ஓராண்டில் இந்த அளவு பூஞ்சை தொற்று பாதிப்பு இருந்ததில்லை. நம் நாட்டில் மட்டும் இல்லை; வெளிநாடுகளிலும் பாதிப்பு இருக்கிறது.

டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன்,

தொற்று நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர்,

குளோபல் மருத்துவமனை, சென்னை

97898 41925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us