PUBLISHED ON : நவ 14, 2021

அ நிறம் | அளவு
ரத்தத்தை உறைய வைப்பது தட்டணுக்களின் தன்மை. 'டெங்கு' பாதிப்பின் போது தட்டணுக்கள் குறைவதால், தோலுக்கு அடியில் உள்ள ரத்த நாளங்களில், ரத்தக்கசிவு ஏற்பட்டு, இறப்பு நேர்கிறது. தட்டணுக்கள் குறையாமல் இருக்க, மருத்துவ உதவியோடு, உடல் திரவம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்தில், 2.5 லட்சம் என்ற அளவில் தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 10 ஆயிரத்திற்கும் கீழ் குறையும் போது, தட்டணுக்கள் செலுத்த வேண்டும்.
வைரஸ் தொற்று உடலில் இருக்கும் போது தட்டணுக்களை ஏற்றினால், அடுத்த நாளே குறைந்து விடலாம். உடலில் உற்பத்தியாகும் தட்டணுக்களை அழிப்பதே, டெங்கு வைரசின் வேலை. நோய் எதிர்ப்பு சக்தி, டெங்கு வைரசை முற்றிலும் அழித்த பின், உற்பத்தியாகும் தட்டணுக்கள் தான் அழியாமல் இருக்கும்.
-சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை
