தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வயிற்றுக்கு வைத்தியம் பயறு

வயிற்றுக்கு வைத்தியம் பயறு

வயிற்றுக்கு வைத்தியம் பயறு


PUBLISHED ON : பிப் 19, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாசிப்பயறு, உடல் நலத்துக்கு மிகவும் நல்ல உணவு. முளை கட்டிய பயறு மிகவும் சத்தானது. மற்ற தானியம் போல முளை கட்டிய பயறு வகை வாயுத்தன்மை இல்லாதது. ஆகவே இது நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாகிறது. இதில், லைசின் எனப்படும், அமினோ ஆசிட் அதிக அளவில் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட் மற்றும் வைட்டமின் பி, சி அடங்கியது.

டென்னிஸ், டான்ஸ் போன்ற உடல் பயிற்சி அதிகம் உள்ள குழந்தைகளுக்கு தேவையான உடல் பலத்தை அளிக்கக் கூடிய ஒரு உணவு. முளைகட்டிய பயரில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. காய்ச்சல், தலைவலி மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுக்காக சீன மருத்துவத்தில் மருந்தாக உபயோகிக்கின்றனர்.

இதை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். பச்சை பயறை ஒரு பிடி எடுத்து, சில மணி நேரம் ஊற வைத்து, வடிகட்டிய பின் ஒரு ஓட்டைப் பாத்திரம் அல்லது காய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்து விட்டால் மறுநாள் காலை முளை விட்டு இருக்கும்.

சிலர் துணியில் மூட்டை கட்டுவார்கள். இது சில சமயம் நாற்றமெடுக்கும். அதனால், காற்றுப் போகக் கூடிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் நன்றாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் சாப்பிட ஏற்ற உணவு பாசிப்பயறு. குழந்தைகளும் வயதானவர்களும் மிக எளிதில் ஜீரணமாக கூடியது. பயறு வகையில் சத்தான உணவு. பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இப்பயறு வகை, பின் தெற்கு சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது.

பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும் வளரும் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம். சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருத்துவப் பொருளாக பயன்படுகிறது.

மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும். பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்

சிக்கலும் குணமாகும். பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். முளைகட்டிய பாசி பயறை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள அல்சர் புண் ஆறும்.

சர்க்கரை நோய் மற்றும் அல்சர் தொல்லை இருப்பவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும். எண்ணெய் பலகாரம், பிஸ்கெட் போன்ற உணவுகளை சாப்பிடுவதை விட வேகவைத்து தாளித்த, பாசிபயற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. மாலை நேரங்களில், சினாக்ஸ் ஆக, பாசிப்பயறை சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us