
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காது குடைவது யாருக்கு தான் பிடிக்காது. அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது, காதுகளை குடைந்து விடுவர். அது தரும் சுகமே தனி. ஆனால், காதை உட்புறத்தில் சுத்தம் செய்வது தவறு. மேலும், காதில் இருந்து நாம் அழுக்கு என, எண்ணி சுத்தம் செய்யும் மெழுகு போன்ற பொருள் தான், காதின் ஆரோக்கியத்தை காக்கும் பொருளாகும். முக்கியமாக பட்ஸ், ஹேர் பின், குச்சி, கோழியின் சிறகு என, எதையும் காது குடைய பயன்படுத்த கூடாது.சிலர், குளித்து முடித்து வந்தவுடன் அழுக்கை அகற்றுகிறேன் என, காது குடைய ஆரம்பித்துவிடுவர். நம் காதுகளையும், அதன் மென்மையான உள்பாகங்களையும் பாதுகாப்பதே அந்த மெழுகு போன்ற ஒன்று தான். அது அழுக்கு அல்ல. எனவே, காதை உட்புறமாக குடையக் கூடாது. அதற்கு மாறாக, வெளிப்புற காதை மட்டும் சுத்தம் செய்துக் கொள்ளலாம்.

