தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன?

இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன?

இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகின்றன?


PUBLISHED ON : ஜூலை 29, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு சினை முட்டை, கருவுற்ற சில நாட்களில் இரண்டாகப் பிரிந்து இரண்டு குழந்தைகள் உருவாகலாம். இப்படி பிறக்கும் குழந்தைகள், இரண்டு ஆண் அல்லது இரண்டு பெண் என்று இருக்கும்; 'அல்லது இரண்டு முட்டைகள், தனித்தனியாக உருவாகி தனித்தனி விந்துக்களுடன் சேர்ந்து, இரண்டும் சினை முட்டையாக மாறலாம். இதனால் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டையர்கள் தோன்றுவது உண்டு. சில நேரம், ஒரு சினைமுட்டை இரண்டாகப் பிரியும்போது, முழுவதும் பிரிந்து போகாமல், கொஞ்சம் ஒட்டிக்கொண்டு அப்படியே கர்ப்பப் பையில் வளர்ந்து, குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிப் பிறப்பர்.

இரட்டை குழந்தைகளாக பிறக்கும் சில குழந்தைகள், பார்க்க ஒரே மாதிரியாக இருந்தால் அவர்களில், ஒரு சிலருக்கு ஒரே மாதிரியான மரபணுக்கள் இருக்கும். ஆனால், கைரேகைகள் மட்டும் வெவ்வேறு மாதிரி இருக்கும். முப்பத்தைந்து வயதுக்கு மேல் கருவுறும் பெண்களுக்கு, இரட்டையர்கள் பிறக்கும் வாய்ப்புகள்

அதிகம் இருக்கின்றன. செயற்கை முறையில் கருத்தரிப்போர் மற்றும் கருத்தரிப்புக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு, இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. கருவில் இருக்கும் போது சில இரட்டையர்கள் கட்டியணைத்து தான் இருப்பர். பெரும்பாலான இரட்டைக் குழந்தைகள், குறை பிரசவமாக பிறக்கின்றன. பெரும்பாலும், 36 வாரத்திலேயே இரட்டைக் குழந்தைகள் பிறந்து விடுவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

- ஜெ.குமுதா,

பச்சிளம் குழந்தைகள் நிபுணர்; பச்சிளம் குழந்தைகள் பிரிவு துறைத் தலைவர்.

சவீதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. சென்னை.

94440 23733


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us