PUBLISHED ON : அக் 11, 2015
பல இடங்களில் வை-பை வசதிகளை ஏற்படுத்தி அதன் மூலம், இணையதள வசதியை பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட, முக்கிய இடங்களில் வை-பை வசதி செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வை-பை வசதியை ஏற்படுத்தி மொபைல்போன், லேப்டாப், டேப்லட் போன்றவற்றில் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். வை-பை வெளியிடும், மின்காந்த அலைகள் அந்த அறை முழுவதும் பரவியிருக்கும்.
அதனால் உடலின் செயல்பாடுகளை பாதிக்க செய்யும், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பெரியவர்களை விட குழந்தைகளைதான், வைபை மின்காந்த அலைகள் அதிகமாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் குறைவதோடு, புரிதல் தன்மையும் குறைந்து விடுகிறதாம்.
மொபைல்போனில் குறிப்பிட்ட அளவுக்கு தான், மின்காந்த சக்தி இருக்க வேண்டும் என்று சர்வதேச விதிமுறைகள் கூறுகிறது. ஆனால்,
மலிவான மொபைல்போன்களில், இந்த விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை.
அதிக சக்தி கொண்ட மின்காந்தத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ரேடியோ
அலை கொண்ட எந்த ஒரு மின்காந்த பொருளை அதிகமாக பயன்படுத்தினாலும், உடல்நிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
தலைவலி, எரிச்சல், கேட்கும் திறன் பாதிப்பு, தூக்கமின்மை, உடல் சோர்வு, நிம்மதி இழப்பு, மனநிலை குழப்பம், தலைச்சுற்று போன்றவை ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க வை-பை பயன்பாட்டை தேவையில்லாத பொழுது, தவிர்த்தாலே போதும்.

