sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

அலோபதி - "டாய்லெட்டில் புகைப்பது மற்றவரை பாதிக்குமா!'

/

அலோபதி - "டாய்லெட்டில் புகைப்பது மற்றவரை பாதிக்குமா!'

அலோபதி - "டாய்லெட்டில் புகைப்பது மற்றவரை பாதிக்குமா!'

அலோபதி - "டாய்லெட்டில் புகைப்பது மற்றவரை பாதிக்குமா!'


PUBLISHED ON : டிச 23, 2012

Google News

PUBLISHED ON : டிச 23, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீடுகளில் உள்ள டாய்லெட் மற்றும் குளியலறையில், காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால், அங்கு ஒருவர் புகை பிடித்தால், அந்த சிகரெட் புகை, அங்கேயே தங்கி விடும். அதே டாய்லெட்டை பயன்படுத்தும்போது, அந்தப் புகை, உங்கள் நுரையீரலுக்கும் சென்று பாதிப்பை உண்டாக்குகிறது.

என் கணவர், தினமும், 'டாய்லெட்'டில் புகை பிடிக்கிறார். இதனால் எனக்கும், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுமா?

- காயத்ரி, மதுரை


புகை பிடிப்பது, எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமோ, அதைவிட அதிக பாதிப்பு, புகைப்பவரின் அருகில் இருப்பவருக்கு ஏற்படுகிறது. இதை, 'பாசிவ் ஸ்மோக்கிங்' என்பர். புகை பிடிப்பதால், ரத்தக் கொதிப்பு, நுரையீரல், இதயம் சம்பந்தமான தொந்தரவுகள் மற்றும் புற்று நோய் வரக்கூடும். அதே போல, பாசிவ் ஸ்மோக்கிங் மூலம் பாதிக்கப்படுவோருக்கும், இதே பிரச்னைகள் வரக்கூடும். வீடுகளில் உள்ள டாய்லெட் மற்றும் குளியலறையில், காற்றோட்டம் குறைவாக இருக்கும். அதனால், அங்கு ஒருவர் புகை பிடித்தால், அந்த சிகரெட் புகை, அங்கேயே தங்கி விடும். நீங்களும், உங்கள் குழந்தைகளும் அதே டாய்லெட்டை பயன்படுத்தும்போது, அந்தப் புகை, உங்கள் நுரையீரலுக்கும் சென்று பாதிப்பை உண்டாக்குகிறது. ஆகையால், உங்கள் கணவர், குழந்தைகள் நலன் கருதி, டாய்லெட்டில் புகைப்பதை நிறுத்துவது, மிக அவசியம்.

என் வயது, 35. 10 ஆண்டுகளாக ஈஸ்நோபிலியா உள்ளது. அவ்வப்போது, மூச்சுத் திணறலும் ஏற்படுகிறதே?

- வேல்குமார், திருநெல்வேலி


ரத்தத்தில் உள்ள, 'ஈஸ்நோபில்'களின் எண்ணிக்கை, அதிகம் இருந்தால், அதை, ஈஸ்நோபிலியா என்கிறோம். இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு, உடம்பின் மற்ற பகுதிகளிலும், அலர்ஜியால் பாதிப்பு ஏற்படலாம். உதாரணமாக காது, மூக்கு, தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டால், தும்மல் மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டால், இருமல், மூச்சுத் திணறல் உண்டாகிறது. பொதுவாக, நம் ரத்தத்தில், ஈஸ்நோபில் அதிகம் இருந்தாலும் கூட, மூச்சுத் திணறல் ஏற்படும்.

ஈஸ்நோபிலியாவுக்கு நீங்கள், அதை குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மூச்சுத் திணறலுக்கு காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு ஏற்ப மருந்துகள் எடுப்பது நல்லது.

என் மகன் வயது, 10. பேனாவின் மூடியை வாயில் வைத்திருந்த போது, அதன் சிறுபகுதி, சுவாசக் குழாயினுள் சென்று விட்டது. அதை, பிராங்கோஸ்கோபி மூலம் வெளியே எடுத்துவிட்டோம். இதனால், நுரையீரலில் பாதிப்பு ஏற்படுமா?

- ரேவதி, விருதுநகர்


குழந்தைகள் வாயில் வைத்து இருக்கும் பொருள், மூச்சை உள்ளே இழுக்கும் போது, தவறுதலாக சுவாசக் குழாய்க்குள் சென்று விடுகிறது. அவ்வாறு சென்ற பொருள், அங்கு அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால், கடுமையான இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம். மேலும், நீண்ட நாட்களாக அவ்வாறு அடைப்பு ஏற்பட்டு இருந்தால், அந்த சுவாசக் குழாய்க்கு உரிய நுரையீரல் பகுதி விரிவடைந்து, 'பிராங்கியக்டஸிஸ்' உருவாகிறது.

இந்த நிலை ஏற்படாமல் தடுக்க, நுரையீரலுக்குள் சென்ற பொருளை, அவசர கால நடவடிக்கையாக, 'பிராங்கோஸ்கோபி' என்ற கருவியின் மூலம் அகற்றுவது நல்லது. உங்கள் குழந்தைக்கு, பேனாவின் மூடியை, அக்கருவியை பயன்படுத்தி, உடனடியாக வெளியே எடுத்தது மிகவும் நல்லது. இதனால், கண்டிப்பாக பாதிப்பு ஏற்படாது.

டாக்டர் எம். பழனியப்பன்,

94425 24147






      Dinamalar
      Follow us