தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/மாரடைப்பை தடுக்கும் பாதாம்

மாரடைப்பை தடுக்கும் பாதாம்

மாரடைப்பை தடுக்கும் பாதாம்


PUBLISHED ON : டிச 13, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 13, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதாம் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்க முயற்சிப்போருக்கும், எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். இதில் பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்து, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில், 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பிரச்னையில்லை.

இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில், 5 நாட்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம், 50 சதவிகிதமாகக் குறையும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வாரத்தில், 2 முறையாவது, ஐந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு, 31 சதவீதம் உதவும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அதிகரிக்காமல் தவிர்க்க பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு, ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்ற உணவுப்பொருளாக பாதாம் பருப்பு கருதப்படுகிறது. நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கூட, தினசரி ஐந்து பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள, ரிபோபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம்

பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய, அல்சீமர் எனும் மறதி நோயை தவிர்ப்பதில், பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால், அதை இளவயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.

நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், படிக்கிற பிள்ளைகள் பாடங்கள் மறக்காமலிருக்க, பாதாம் சாப்பிடலாம். முறையாக பாதாம் சாப்பிடும் பிள்ளைகளின் மூளை, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். மற்ற தானியங்களில் இல்லாத அளவுக்கு, பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியவை. அழகை மேம்படுத்துவதிலும், பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்டமின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது.

சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும். பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி,

கூந்தலுக்கு போஷாக்கு தரும்.

பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ,

தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்த முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us