தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கவனமின்மையை போக்க உதவும் பாதாம்!

கவனமின்மையை போக்க உதவும் பாதாம்!

கவனமின்மையை போக்க உதவும் பாதாம்!


PUBLISHED ON : பிப் 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேர்வு நெருங்கினாலே, மன அழுத்தம், பயம் காரணமாக, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மாணவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. சரியாக சாப்பிடுவதில்லை; சரியாக துாங்குவதில்லை.'கவனமாகப் படி; கஷ்டப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் வாங்கி விட்டால், வாழ்க்கை முழுவதும் கவலை இல்லை' என்று, ஏதோ மொத்த வாழ்க்கையையும், 10, பிளஸ் 2 மதிப்பெண் மட்டுமே தீர்மானிப்பதாக, அழுத்தத்தை கொடுக்கிறோம்.

தேர்வுக்கு தயாராகும் நேரத்தில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். போதுமான துாக்கம், சத்தான உணவு, படிக்கும் நேரத்தில், குறிப்பிட்ட இடைவெளியில், ஊட்டச்சத்து மிக்க சிற்றுண்டி தர வேண்டும்.

இவை தான், குழந்தைகளை முழு கவனத்துடன் படிக்க உதவும். குழந்தைப் பருவத்தில் இருந்தே, பதப்படுத்தப்பட்ட துரித உணவுகளையே நாம் பழக்கி இருப்பதால், இயல்பாகவே அதன் மேல் தான், ஆர்வம் அதிகம் இருக்கும். இது போன்ற உணவுகள், அவர்களின் வளர்ச்சி, உடல் எடையில் பல விளைவுகளை ஏற்படுத்துவதோடு, கவனமின்மையை உண்டாக்கக் கூடியது.

குழந்தைகள் என்ன சாப்பிட வேண்டும் என்பதில், பெற்றோர் பொறுப்பாக இருக்க வேண்டும். தினசரி உணவில், அதிக புரதம் மற்றும் அத்தியாவசிய நுண்ணுாட்டச் சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள், முட்டை, முழு தானியங்கள், நட்ஸ் போன்றவற்றை, அதிக அளவில் தர வேண்டும்.

தேர்வு நேரத்தில், வழக்கத்தை விடவும், அதிக நேரம் படிப்பதால், மூன்று வேளை சாப்பிடும் முழு உணவிற்கு இடையில், அடிக்கடி பசி எடுக்கும். இச்சமயங்களில், உடனடியாக கிடைக்கக் கூடிய, ஆரோக்கியமற்ற உணவுகளை, குழந்தைகள் சாப்பிட்டு விடலாம். இதைத் தவிர்க்க, பாதாம் பருப்பு நல்ல தேர்வு. பாதாம் கலந்த உணவுகளை இரண்டு வேளை தரும் போது, நரம்பு மண்டலத்தைத் துாண்டி, மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்; எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.

டாக்டர் ஷீலா கிருஷ்ணசுவாமி,

சத்துணவு நிபுணர், பெங்களூரு.

sheelakrishnaswamy@gmail.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us