sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ஆயுர்வேத மருந்துகளிலும் உடனடி நிவாரணம் கிடைக்கும்!

ஆயுர்வேத மருந்துகளிலும் உடனடி நிவாரணம் கிடைக்கும்!

ஆயுர்வேத மருந்துகளிலும் உடனடி நிவாரணம் கிடைக்கும்!


PUBLISHED ON : பிப் 24, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கொரோனா, டெங்கு, சிக்குன் குனியா' என்று, எந்த வைரஸ் தொற்றாக இருந்தாலும், அலோபதி மருத்துவத்தில், 'ஆன்டி வைரல்' மருந்துகள் தருவர். ஆனால், ஆயுர்வேதம் உட்பட, நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில், இயற்கையில் விளையும் மூலிகைகள், வைரஸ் தொற்றுக்கு மட்டுமல்லாமல், தொற்று ஏற்படாமல் தடுக்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன.

வைரஸ் தொற்று பரவும் காலங்களில், தொற்று தாக்குதலுக்கு முன், சில மூலிகை மருந்துகளை சாப்பிடுவதால், வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, நெரிஞ்சில், வில்வம் உட்பட, 10 மூலிகைகளில் இருந்து தயாராகும், 'தசமூல கடுத்தர்யம்' என்ற ஆயுர்வேத மருந்து, இதற்கு நல்ல உதாரணம். இது, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கிருமிகளுடன் போராட உதவுகிறது. தடுப்பு மருந்தாக மட்டுமல்லாமல், வைரஸ் தொற்று ஏற்பட்ட பின், கிருமிகளின் வீரியத்தைக் குறைத்து, நிலைமை மேலும் சிக்கலாகாமல் தடுக்கவும், இந்த மருந்தை சாப்பிடலாம்.

இதைப் போலவே, நிலவேம்பு கஷாயமும், எதிர்ப்பு சக்தியை தரக் கூடியது. பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் தருவர். இது, பாக்டீரியா கிருமிகளை அழித்து, அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கட்டுப்படுத்தும். இதுபோல், வைரஸ் தொற்றுக்கு செய்ய முடியாது. பெரும்பாலான வைரஸ் தொற்றுக்கு, மருந்துகளே கிடையாது.

வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பக்க விளைவுகளை கட்டுப்படுத்தவே, மருந்துகள் தர வேண்டும். அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் போது, கிருமிகளின் வீரியத்தை குறைத்து, மேலும் அதிகரிக்காமல் இருக்க உதவும்.

தொற்றுக்குப் பின்...



சுக்கு, திப்பிலி, மிளகு போன்றவை, வைரஸ் தொற்றுக்கும், தொற்று சரியான பின் ஏற்படும் பக்க விளைவுகளுக்கும், நல்ல நிவாரணம் தரும். உதாரணமாக, சிக்குன் குனியா வைரஸ் தாக்கும் போது, குணம் ஆன பின், அடுத்த மூன்று மாதங்களுக்கு, மூட்டுகளில் வலி அதிகம் இருக்கும்.இப்படி மாதக்கணக்கில் வலி இருந்தால், வலி நிவாரணிகளை தொடர்ந்து சாப்பிட முடியாது. இதனால், நிறைய பக்க விளைவுகள் வரலாம். இது போன்ற சூழலில், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்ல தீர்வாக இருக்கிறது. அதிமதுரம், ஆடாதொடை இவையும், வைரஸ் தொற்றுகளுக்கு மிகச் சிறந்த மருந்து என்று, மருத்துவ ரீதியில், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வுகள்



கடந்த, 500 ஆண்டுகளாக, ஆயுர்வேத மருத்துவ புத்தகங்களில் எழுதப்பட்டு இருக்கும் மருத்துவ முறைகளை, அப்படியே பின்பற்றி வந்த நிலையில், கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பரிந்துரைக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும், ஆங்கில மருந்துகளைப் போலவே, மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அறிவியல் பூர்வமாக உறுதி செய்த பின்பே தரப்படுகின்றன.

ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நோயை, வாதம், பித்தம், கபம் என்று மூன்றாகப் பிரித்து, அதற்கேற்ப வகைப்படுத்தி உள்ளனர். இந்த மூன்றும் சமநிலையில் இருந்தால், நோயே வராது.ஜீரண மண்டல பிரச்னைகள் மட்டுமே, பித்தத்தால் வரும் பிரச்னைகள் இல்லை. பரவலாக காணப்படும், 'சோரியாசிஸ்' என்ற தோல் நோயும், பித்தத்தால் வருவது. இதற்கு, தோல் நோய்க்கு தரும் மருந்துகளை தரக் கூடாது. பித்தத்தை சமன் செய்ய பயன்படும் மருந்துகளைத் தர வேண்டும்.நெய் சேர்ந்த சில மருந்துகளை கொடுத்து, வாதம், கபத்துடன், பித்தத்தையும் சமன் செய்யும் போது, சோரியாசிசை குணப்படுத்தலாம்.'மெட்டபாலிக் டிசார்டர்' என்று சொல்லப்படும், உடல் உள் உறுப்பு செயல்பாட்டு குறைவால் ஏற்படும் சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற அனைத்து கோளாறுகளுக்கும் சிகிச்சை உள்ளது.

ஆனால், இவை முற்றிலும் குணமாகும் என்று நினைக்கக்கூடாது. உடலின் உள் செயல்பாடே மாறி விட்டதால், இவற்றை கட்டுப்பாட்டில் தான் வைக்க முடியும்.

ஆயுர்வேத மருந்துகளையும், தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு சாப்பிட்டு, கட்டுப்பாட்டில் வைக்க முடியுமே தவிர, முற்றிலும் பழைய நிலைக்கு வருவது என்பது சாத்தியமில்லை.

எல்லா மருத்துவ முறைகளிலும், அறுவை சிகிச்சையின் கடவுள் என்று சொல்லப்படும் சிஸ்ருதர், சர்க்கரை கோளாறு பற்றிக் கூறும்போது, 'இது குருவியின் கூடு மாதிரி. மருந்துகள் சாப்பிட்டு, உணவு கட்டுப்பாடுடன் இருந்தால், சர்க்கரை கோளாறு குணம் ஆனதை போல் இருக்கும். ஆனால், தன்னுடைய கூடு இது என்பதை எப்போதும் மறக்காது. உணவிலோ, வாழ்க்கை முறையிலோ சிறிய மாற்றம் செய்தாலும், திரும்பவும் வந்து உட்கார்ந்து விடும்' என்கிறார்.

தொற்று நோய்கள் போன்றவற்றுக்கு உடனடி நிவாரணம், ஆயுர்வேத மருந்துகளில் இல்லை என்ற தவறான எண்ணம் உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் பிரச்னைகளுக்கும் உடனடி நிவாரணம், நம் பாரம்பரிய மருத்துவ முறையில் உள்ளது.

- டாக்டர் என்.ஆர். ரவி நர்கீஸ்

ஆயுர்வேத மருத்துவர், சென்னை

97898 87007


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us