தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்தசோகை குணமாகும்!

ரத்தசோகை குணமாகும்!

ரத்தசோகை குணமாகும்!


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவீன பொருளாதார தேடல் பாதையில் பயணிக்கும் நாம், நோய்களுக்கு அடிமையாகி விட்டோம் என்பதை மறந்து விடுகிறோம். இப்படியே போனால், வரும் சந்ததிகளின் உடல் வலிமை கேள்விகுறி தான். தனிப்பட்ட நபரின் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ள வேண்டியது, அவரவர் கடமை. எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எதெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக, அனைத்து சாப்பாட்டையும் ஒதுக்கி, குறிப்பிட்டவற்றை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என்பது அர்த்தமில்லை. 'பாஸ்ட்புட்' உணவு வகைகளை தவிர்த்து, இயற்கை முறையிலான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். அப்போதே, ஆரோக்கியம் மேம்படும். தற்போது, ரத்தசோகையால் அனைவரும் பாதிப்படைந்து வருகின்றனர். இதற்கு, வெந்தயக்கீரை சிறந்த நிவாரணியாக செயல்படும் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் சூடு தணியும்: வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால், வாயு தொல்லை கரைந்து விடும். மூன்றே நாட்களில், வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்புசம் இருந்தாலும் தணிந்து விடும். வெந்தயக் கீரையைக் கொண்டு, அல்வா தயாரித்துக் காலை, மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி, வயிற்றுப் போக்கு குணமாகும்.

மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக்கீரையில், 'ஏ' வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது, மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறி சிரங்கு, ரத்தசோகை ஆகியவை குணமடையவும். பசியை போக்கவும் பயன்படுகிறது. இவ்வாறு, வெந்தயக்கீரையை சாப்பிடும் உணவில் சேர்த்து கொள்ளும் போது, ஆரோக்கியம் மேம்படும்.

உடலுக்கு இரும்பு சத்து: வெந்தய கீரை, சிறந்த மலம் இளக்கியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. கீரையில் நார் சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. கீரை எலும்புகளுக்கும், உடலுக்கும் பலத்தையும் சீரான வளர்ச்சியையும் தரவல்லது.

உடல் பலவீனமானவர்கள், இதை உட்கொள்ள பலம் பெறுவர். வெந்தய கீரை தோல் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது; ரத்தத்தை பெருக்கி உடலை வலிமையாக்கும். வாயு கோளாறுக்கு, சிறிது ஓமம் எடுத்து வெந்தய கீரையுடன் சாப்பிட்டால் வாயு கோளாறு நிவர்த்தியாகும்.

சுத்தமாகும் ரத்தம்: ரத்தம் கெட்டுப்போனவர்கள், ரத்த சோகையால் வாடுபவர்கள், இக்கீரை சாப்பிட ரத்தம் சுத்தமாவதுடன் ரத்த விருத்தியும் ஏற்படும். சிறு குழந்தைகளுக்கும் கீரையை தாராளமாக கொடுக்கலாம். அஜீரணத்தை போக்கி, பசியை தூண்டும். குழந்தைகளின் அறிவை தெளிவுபடுத்தும். சுறுசுறுப்பை அளிக்கும். மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். கண் தொடர்பான வேறு நோய்களையும் குணமாக்கவல்லது. இக்கீரையை குழந்தைகள் முதல் முதியவர் வரை, அடிக்கடி சாப்பிட்டு வர உடலுக்கு தெம்பு கொடுக்கும். இக்கீரையைக் கொண்டு குழம்பு அல்லது பொரியல் கூட்டு செய்து சாப்பிட ருசியாக இருக்கும். வாரத்தில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொண்டால், பல்வேறு உபாதைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us