sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/காஸ்க்கு தடையிடும் குடைமிளகாய்!

காஸ்க்கு தடையிடும் குடைமிளகாய்!

காஸ்க்கு தடையிடும் குடைமிளகாய்!


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குடை மிளகாய் தோற்றத்தில் பெரியது. ஆனால், காரத்தில் ரொம்ப சிறியது, இதில் அவ்வளவு காரம் கிடையாது. மேலும், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதனால் தான், பெரும்பாலான சைனீஸ் உணவுகளில் குடைமிளகாய் இல்லாமல் இருக்காது.

குடை மிளகாயில் குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை அதிகம் உள்ளன. குடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டிஆக்ஸிடன்ட்டாக உள்ளது.

ரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கார்வி என்னும் நோயைத் தவிர்க்கிறது.

குடை மிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. செரிமான பிரச்னைகளுக்கு குடை மிளகாய் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய். இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொழுப்பின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.

இதில், கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது. ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து, இருதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இருதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும், இது ஒரு நல்ல மருந்தாகும்.

கேப்சைசின் என்ற கூட்டுப்பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்புக்கு செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துவதிலும் வல்லது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us