தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/விந்தையான மருந்து வெந்தயம்

விந்தையான மருந்து வெந்தயம்

விந்தையான மருந்து வெந்தயம்


PUBLISHED ON : மார் 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக்குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

இரவில் தூங்குவதற்கு முன், ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின், தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின், வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்.

தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் அண்டவே அண்டாது.

வெந்தயம், 50 கிராம் எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின், மிக்சியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும்போது தண்ணீரில் அல்லது மோரில் கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின், ஒரு டம்ளர் வெந்நீரில் அல்லது மோரில் போட்டு பருகி வந்தால் வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை நீங்கும். மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர், மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டுக் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப் போக்கு கட்டுப்படுத்தப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us