PUBLISHED ON : ஜூலை 28, 2013

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜேஸ்வரி, சென்னை: ஞாபக மறதி அதிகமாக உள்ளது. அதை நீக்க என்ன செய்யலாம்?
நிறைய புத்தகங்கள் படியுங்கள். சமீபத்திய ஆய்வில், புத்தகத்தை ஊன்றிப் படிக்கப் படிக்க, உங்கள் கவனம் ஒருநிலைப்படும் திறன் அதிகரிக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கவனம் சிதறாமல் இருந்தால், உங்கள் நினைவுத் திறனும் தானாகவே அதிகரிக்கும். முயன்று பாருங்கள்; முடியாதது அல்ல இது!