sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை

/

பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை

பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை

பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வரும் ரத்த சோகை


PUBLISHED ON : செப் 22, 2024

Google News

PUBLISHED ON : செப் 22, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் நாட்டில் பெண்களைப் போலவே குழந்தைகளும் அதிக அளவில் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, ஒண்ணரை முதல் -5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்துக் குறைவால் வரும் இரும்புச்சத்து குறைபாடு அதிகம் உள்ளது.

பால், பால் சார்ந்த பொருட்களையே அதிக அளவில் சாப்பிட தருகிறோம். பாலில் அதிக அளவில் புரதம், கால்சியம், சிறிதளவு விட்டமின்கள் உள்ளன. இரும்புச்சத்து கிடையாது. ஒரு நாளில் அதிகபட்சம் 400 மில்லிக்கு மேல் பால் தரக்கூடாது.

இரும்புச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள், பழங்கள் அதிக அளவில் சாப்பிட கொடுக்க வேண்டும்.

விட்டமின் பி12 குறைபாடு, குடல் புழு, கொக்கி புழுக்களின் பாதிப்பு குடலில் இருந்தாலும் ரத்த சோகை வரலாம். அளவுக்கு அதிகமாக பால் குடிக்கும் குழந்தைகள், தாய்ப்பாலுக்கு பதிலாக புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள், சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை வரும் அபாயம் அதிகம்.

சில சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, பிறவியிலேயே புரதச்சத்தும், இரும்புச்சத்தும் சேர்ந்த ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கும். இதனால், ரத்த சிவப்பணுக்கள் அழியும்.

சில குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் செல்கள் அழிவதாலும் ரத்த சோகை வரலாம். ரத்த சிவப்பணுக்களை நோய் எதிர்ப்பணுக்கள் அழிப்பது, ரத்த கேன்சர் பாதிப்பு ஏற்படலாம்.

கன்னங்கள், உதடுகள், கண் இமைகளின் உட்புறம், விரல் நகங்கள், வழக்கமான இளஞ்சிவப்பு நிறத்தில் இல்லாமல் இருப்பது, 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வழக்கத்திற்கு மாறான பசி உணர்வு, மண், சிமென்ட், சாக்பீஸ், விபூதி சாப்பிடும் ஆர்வம், விளையாட்டில் ஆர்வம் குறைவது ரத்த சோகைக்கான அறிகுறிகள்.இரும்புச்சத்து நிறைந்த அடர் பச்சை நிற காய்கறிகள், கேழ்வரகு போன்ற உணவுகளை ஆறு மாதத்திலேயே தர ஆரம்பிக்கலாம்.

ஓராண்டிற்குப் பின், அவித்த மீன், சிக்கன், முட்டை தரலாம். இரும்புச்சத்து டானிக், மூன்று மாதங்கள் தினமும் தர வேண்டும். குடல் புழுக்களை நீக்கத் தேவையான மாத்திரையை 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தர வேண்டும்.

ஹீமோகுளோபின் அளவு 1 டெசி லிட்டரில் 2, 3 கிராம் இருக்கும் குழந்தைகளுக்கும் சரியான ஊட்டச்சத்து கொடுத்தே சரி செய்யலாம். குழந்தைகளுக்கு ரத்த சோகை இருந்தால், மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்; கவனக்குறைவு வரும். தீவிர ரத்த சோகையால் இதய செயலிழப்பு ஏற்படும்.

டாக்டர் ஜனனி சங்கர்,

குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், மருத்துவ இயக்குனர், காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, சென்னை044 4200 1800md.office@kkcth.org






      Dinamalar
      Follow us