sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 25, 2026 ,சித்திரை 12, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

கர்ப்ப கால கட்டிகள் ஆபத்தானவை?

/

கர்ப்ப கால கட்டிகள் ஆபத்தானவை?

கர்ப்ப கால கட்டிகள் ஆபத்தானவை?

கர்ப்ப கால கட்டிகள் ஆபத்தானவை?


PUBLISHED ON : ஜன 01, 2017

Google News

PUBLISHED ON : ஜன 01, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படுவது, தற்போது சகஜமாகி வருகிறது. யூட்டரின் பை பராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் தோன்றுகின்றன. மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டிகள் தோன்றுகின்றன.

ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி, கட்டியை தோன்றச் செய்கிறது. கருப்பை கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகளாக மாறுமோ என, அச்சம் ஏற்படும். ஆனால், பல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல. நான்கில் மூன்று பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரிய வராது.

இடுப்பெலும்புச் சோதனையில், சில மருத்துவர்கள் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு. பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை ஏற்படுத்தினால், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

காரணம் இது, அதிக வலியை ஏற்படுத்துகிறது. அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது நல்லது. கருப்பையில் கட்டி இருக்கும்போது, மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம் ஏற்படும். சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது அதிக சிறுநீர் சேருதல் போன்றவை இதன் அறிகுறிகள்.

கருப்பையின் உள்துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதைதான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். கருப்பையின் புறப்பகுதியில் நீட்டிகொண்டிருக்கும் கட்டி பிளாடரையோ சிறுநீரை அகற்றும் குழாயையோ அழுத்தும். இதனால் சிறுநீர்ப்பாதை உபாதைகள் ஏற்படலாம். கருப்பையின் பின்பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இது முதுகு தண்டு நரம்புகளை அழுத்தும்போது முதுகு வலி ஏற்படுகிறது.

மரபணுக் கூறுகளின் மாற்றங்களால் கூட கட்டி ஏற்படலாம். உடலில் திசுக்களை பராமரிக்கும் சில பொருட்கள், அதாவது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணிகள். கட்டி வளர்ச்சிக்கு காரணமாகலாம். உடலுக்கு வரும் ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம். ஊட்டச்சத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு. இது போன்று அழியும் கட்டியிலிருந்து வெளிவரும் துணைப்பொருட்கள் சுற்றியுள்ள தசைகளில் ஊடுருவி வலியையும் காய்ச்சலையும் எற்படுத்தலாம்.

மகப்பேற்றில் இது ஒரு போதும் இடையூறு செய்யப் போவதில்லை. இவை மெதுவாக வளரும். மாதவிடாய்க்கு பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே கட்டிகள் சுருங்கிவிடும். கருப்பையை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் பல்வேறு பக்க ஆபத்துகளை உருவாக்கலாம் என்பதால் மருத்துவர்கள் வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் இதற்கு பரிந்துரை செய்வார்கள். அல்லது கட்டிகளை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையும் உள்ளது.






      Dinamalar
      Follow us