தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கண்கள் நமக்கு அரண்கள்

கண்கள் நமக்கு அரண்கள்

கண்கள் நமக்கு அரண்கள்


PUBLISHED ON : ஜன 01, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் உள்ளத்தின் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். அந்த கண்களில் உண்டாகிற பிரச்னைகள், அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. கண் தொடர்பான சில பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்ப்போமா?

கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. பொதுவாக 25 வயது ஆனாலே, கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்கள் வந்து விடும். அப்போது, கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐஸ்கிரீம் அல்லது விளக்கெண்ணெயை தடவி விடலாம். மோதிர விரலால் அழுத்தம் கொடுக்கலாம், மெதுவாக மசாஜ் தரலாம்.

கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் உபயோகிக்கலாம்.

தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் தூங்கும் முன்னரும், தூங்கி எழுந்த பிறகும், 2 முறை செய்து வந்தால், சுருக்கங்கள் காணாமல் போயிவிடும்.

சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்ப்யூட்டர், 'டிவி' முன் அதிக நேரம் இருப்பது ஆகியன, கருவளையங்கள் வருவதற்கான, காரணங்களாகும். இதற்கு எட்டு மணி நேரத் தூக்கம் முதல் சிகிச்சை. பகல் நேரத்தில் உள்ளங்கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடிய படி அடிக்கடி செய்யலாம்.

கண்களை வேகமாக மூடித்திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித சிறந்த மசாஜ். கண்களை இறுக மூடவும். பிறகு அகலமாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். இது கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க, இதை தொடர்ந்து செய்து வரலாம். இதை ஆரம்பத்திலேயே கவனித்து வந்தாலே, கருவளையங்கள் எளிதில் மறைந்து விடும்.

பொதுவாக சிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி இருக்கும். இது உடல் நலத்தில் ஏதாவது கோளாறு என்பதற்கான அறிகுறி. காலையில் தென்

படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண்ணீரால் மாறி, மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை நாடுவது சிறந்தது.

கண்களுக்கு உபயோகிக்கிற மை, பிரஷ், ஐ லைனர், மஸ்காரா போன்ற ஏதேனும் அலர்ஜியானால் இப்படி கண்ணீர் வடியலாம். வாயில் துணியை வைத்து

ஊதி கண்களின்மேல் வைக்கிற பழக்கம் வேண்டாம். எச்சில் மூலம் தொற்றுக் கிருமிகள் கண்களுக்குள் போகும். கண்களைக் கழுவிவிட்டு அப்படியே

காத்திருக்கலாம்.

கண்களுக்கான மேக்கப் சாதனங்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டியது முக்கியம். இரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும்.

ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். 2, 3 முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us