PUBLISHED ON : ஜூலை 13, 2025

ரேபிஸ் தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுபவர்கள் உயிரிழந்த சமபவங்கள் சமீப நாட்களில் செய்திகளில் வருகின்றன.
ரேபிசைப் பொருத்தவரை, தலையில் நாய் கடித்ததா, ரத்தம் வரும் அளவிற்கு கடியா என்று நாய் கடியின் தீவிரத்தைப் பொருத்து கிரேடு 1, 2, 3 என்று பிரித்து விடுவோம்.
கடித்த இடத்தில் ரேபிஸ் இம்மினோகுளோபளின் மருந்தை செலுத்தியபின், தடுப்பூசியும் போடுவோம்.
தாமதமான சிகிச்சை, கடித்த இடத்தை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது, வீட்டு நாய்தானே எதுவும் செய்யாது என்று 24 மணி நேரத்திற்கு பின் டாக்டரிடம் செல்வது போன்றவை ரேபிசால் எற்படும் உரிரிழப்பிற்கு காரணம்.
நாய் கடித்த ஆறு மணி நேரத்திற்குள் இம்மினோகுளோபளின் மருந்து, தடுப்பூசி இரண்டும் கொடுத்தால் தொற்று பாதிப்பு வராது; உயிரிழப்பைத் தடுக்க முடியும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நான் அரசு மருத்துவமனையில் தான் வேலை பார்த்தேன். தீவிர நாய் கடியுடன் வந்த எத்தனையோ குழந்தைகளுக்கு இது போன்ற சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளோம். அவர்களில் யாருக்கும் மீண்டும் ரேபிஸ் தொற்று வரவில்லை.
இத்தனைக்கும் பல குழந்தைகளை ரேபிஸ் கிருமி தொற்று இருக்கும் நாய் கடித்து குதறி இருக்கும். சரியான முறையில், சரியான அளவில் ரேபிஸ் தடுப்பு மருந்து டோஸ் கிடைத்தால் தொற்று மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை.
இன்னொரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி பட்டியலில் ரேபிஸ் தடுப்பூசி சேர்க்கப்படவில்லை. காரணம், வளர்ப்பு விலங்குகளுடன் விளையாடும் வாய்ப்புள்ள குழந்தைகள், கால்நடை துறையில் வேலை பார்ப்பவர்கள் என்று நாய் கடிக்கும் அபாயம் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்கூட்டியே தடுப்பூசி போடுகிறோம். மற்றவர்களுக்கு நாய் கடித்தால் மட்டுமே தருவோம்.
எல்லா தடுப்பூசிகளும் பாதுகாப்பு தருமா?
வேக்சின் எபிக்கசி - vaccine efficacy எனப்படும் தடுப்பூசியின் செயல்திறன் என்பது, ஒரு சில தடுப்பூசிகள தவிர, மற்றவற்றில் 100 சதவீதம் பலன் தராது. உதாரணமாக, போலியோ தடுப்பூசி மூன்று 'டோஸ்' தரலாம்; வாய் வழி மருந்தாகவும் பல டோஸ் தரப்படுகிறது. இது 100 சதவீதம் பாதுகாப்பு தரும்.
அதேபோல கக்குவான் இருமல், பெரியம்மை உட்பட சில தொற்றுகளுக்கு, கிருமி நம் உடலுக்குள் சென்று அறிகுறிகளாக வெளிப்படாத இன்குபேஷன் காலத்தில் போட்டாலும் பலன் தரும்.
தமிழகத்தில் டிப்தீரியா, டெட்டனஸ், கக்குவான் இருமல் பாதிப்பு ஒன்று கூட பார்க்க முடியாது. டிபிடி- DPT எனப்படும் முத்தடுப்பூசியை ஒரு வயது வரை எல்லாக் குழந்தைகளுக்கும் போடுவதை முழுமையாகப் உறுதி செய்துள்ளோம்.
இங்கு 'ரிப்போர்ட' ஆன பாதிப்புகள் அனைத்தும் அண்டை மாநில குழந்தைகள்.
டாக்டர் வித்யா, வி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,சிம்ஸ் மருத்துவமனை, சென்னை044 20002001, 9877715223enquiry@simshospitals.com