
ஆயுர்வேதம் என்பது உயிர் அறிவியலின் அடிப்படையிலான சிகிச்சை முறை. ஆயுர்வேத மருத்துவம் மிகப் பழமையான மருத்துவ அறிவியல். தற்போது நமக்கு கிடைக்கும் ஆயுர்வேத புத்தகங்களான ஸரக சம்ஹிதா, சுஷ்ருத சம்ஹிதா போன்றவை, 10,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை.
இவற்றில், பல்வேறு வகையான அறுவை சிகிச்சை முறைகளும் விரிவாக எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு வந்த பின், நம் கல்வி முறை மாறி விட்டதால், அறுவை சிகிச்சை இல்லாத ஆயுர்வேத சிகிச்சை முறைகள் மட்டும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.
ஆயுர்வேத மருத்துவத்தில் எட்டு பிரிவுகள் இருந்தாலும், முழு உடல் சார்ந்த அணுகுமுறையே பின்பற்றப்படுகிறது. அலோபதி மருத்துவ முறை போல இதயம், நுரையீரல், கல்லீரல், கண் என்று உள்ளுறுப்புகளுக்கு பிரத்யேகமாகவோ, மகப்பேறு, குழந்தைகள் நலம் என்று தனித் தனி பிரிவுகளாக சிகிச்சை கிடையாது.
சில உடல் கோளாறுகளை குணப்படுத்த முடியாது என்று நவீன மருத்துவம் சொல்கிறது.
குணப்படுத்தவே முடியாத ஒன்றுக்கு ஏன் ஆயுர்வேதம் உட்பட வேறு சிகிச்சை முறைகளை தேட வேண்டும் என்று கேட்கலாம்.
என் பதில், சிகிச்சை செய்யும் டாக்டரை விடவும் மருத்துவ முறை சிறந்தது. எனவே, முதலில் டாக்டரை மாற்றிப் பார்க்கலாம்.
குறிப்பிட்ட மருத்துவ முறையில் உடல் கோளாறை சரி செய்வதற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் உள்ளதோ அவற்றை எல்லாம் முயற்சி செய்யலாம். அதே நேரத்தில், மருத்துவ அறிவியலுக்கும் ஒரு எல்லை உண்டு. இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரலாம்.
ஆனால், தன்னைத் தானே சரி செய்து கொள்வதில் டாக்டர், மருத்துவ அறிவியல் இரண்டைக் காட்டிலும், நம் உடலுக்கு எல்லையில்லாத சக்தி இருக்கிறது. நம் உள்ளுணர்வு நிச்சயமாக இது குணமாகும் என்று நம்பினால், நிச்சயம் குணம் பெற முடியும். இனி எதுவுமே செய்ய முடியாது என்று மருத்துவரும், மருத்துவ முறைகளும் கைவிட்ட பல நோயாளிகள், தங்கள் உள்ளுணர்வை நம்பி குணம் பெற்ற அதிசயங்கள் நிறைய உள்ளன.
நவீன மருத்துவ அறிவியல் போன்று, உடலை வெறும் அமைப்பாக பார்க்காமல், சக்தியுடன் சேர்ந்த அமைப்பாக கருதுகிறது ஆயுர்வேதம்.
அதனால் தான், கொரோனா தொற்று பரவலின் போது, உடனடியாக இந்துகாந்தம், நிலவேம்பு கஷாயங்களை பரிந்துரைத்தோம். என்ன வைரஸ் என்றே தெரியாத போது எப்படி மருந்து தர முடியும் என்று அலோபதி டாக்டர்கள் என்னிடம் கேட்டனர்.
கிருமியை அழிப்பது நம் நோக்கம் இல்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்துவது தான் இதற்கு தீர்வாக இருக்கும் என்று சொன்னேன்.
பஞ்ச பூதங்களால் ஆன உடல், ரத்தம், மேதஸ், ரஸம், மாம்சம் உட்பட அழியாத ஏழு தாதுக்களால் ஆனது.
உடல் உருவாகும் போது வாதம், பித்தம், கபம் என்ற மூன்று அடிப்படை தோஷங்கள் இருக்கும்.
பை நிறைய பரிசோதனை ரிப்போர்ட்டுகளுடன் வந்து, எல்லாம் நார்மல் என்று தான் இருக்கிறது டாக்டர்... ஆனால், நான் ஆரோக்கியமாக உணரவில்லை. இந்த டெஸ்ட்டுகளால் ஏன் என் பிரச்னையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேட்பர்.
என் பதில், இவை எல்லாம் நோய் நிர்வாகத்திற்காக மட்டுமே செய்யப்படுபவை; ஆரோக்கியத்தை அளவீடு செய்வதற்கு இல்லை.
நான் சுகமாக இருக்கிறேனா என்ற கேள்வி வரும் சமயங்களில் எல்லாம் டாக்டரிடம் செல்கிறோம். சுகமாக இருக்கிறேனா டாக்டர் என்று கேட்கிறோம். இந்தக் கேள்வியே தவறு.
நான் சுகமாகத் தான் இருக்கிறேன் என்று நம்புவது தான் சுகமாக இருக்க ஒரே வழி.
டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர்,
ஸ்ரீ ஹரியம் ஆயுர்வேதம்,
சென்னை.
86101 77899
sreehareeyam.co.in