உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 28, 2020

அ நிறம் | அளவு
கொரோனா வைரஸ் தொற்றால், கண்களில் அழற்சி ஏற்பட்டு, எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகள், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் பாதிப்பு இருப்பவர்கள் என, இரு தரப்பினருக்கும் அரிதாக ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
கைகளை முதலில் கழுவிய பின், கண்களையும் சுத்தமான நீரால் அடிக்கடி கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும், கைகளை சுத்தம் செய்த பின், கண்களை கழுவ வேண்டும்.
கண்களை தொடுவதை தவிர்க்க, வெளியில் செல்லும் போது, தரமான கண்ணாடிகளை அணிந்துக் கொள்ளுங்கள். கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், வைரஸ் தொற்று காலத்தில், அதை தவிர்த்து, கண்ணாடி அணிவது பாதுகாப்பானது.
டாக்டர் எம்.சாய்ஸ்ரீ, கண் மருத்துவர், விஜயவாடா
