தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தமிழகத்தின் பிரத்யேக மருத்துவ அறிவு!

தமிழகத்தின் பிரத்யேக மருத்துவ அறிவு!

தமிழகத்தின் பிரத்யேக மருத்துவ அறிவு!


PUBLISHED ON : ஏப் 27, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 27, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டை விட்டு, வெளியே செல்ல முடியாத சூழலில் இருக்கும் இந்த நிலையில், கபசுர குடிநீர், வாதசுர குடிநீர் குடிப்பது நல்லது என, அறிவுரை சொல்கிறோம். சித்த மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள் முழுமையாக செயல்பட முடியாத நிலையில், இந்த குடிநீர் எப்படி பெற முடியும்? ஒரு மருத்துவ மையத்தில் தயார் செய்து, அனைவருக்கும் தருவது அல்லது வீடு வீடாக சென்று தருவது, நடைமுறையில் சாத்தியம் இல்லை.

வேப்பிலை



உலகம் முழுதையும், கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வரும் இந்த வேளையில், மற்ற நாட்டவருக்கு இல்லாத ஒரு வரம், நம் நாட்டிற்கு, குறிப்பாக தமிழகத்திற்கு உள்ளது. அது தான், நம் பாரம்பரிய மருத்துவ அறிவு.தமிழகத்தை பொறுத்தவரை, அம்மை போன்ற வைரஸ் தொற்று, கொள்ளை நோய்கள் புதிது கிடையாது. பருவ மாற்றங்கள் ஏற்படும் போது, வைரஸ் தொற்றும் வருவது வழக்கம்.புதிதாக ஒரு வைரஸ் கிருமியால் பாதிப்பு வரும் போது, அதற்கு மருந்து இல்லை. ஆனால், அதனால் ஏற்படும் அறிகுறிகளை கட்டுப்படுத்த மருந்து உள்ளது என, ஹைட்ராக்சிக்ளோரோக்வின் சாப்பிட்டு, இந்தக் கோளாறுகளை வர வைத்துக் கொள்வதை விட, வேப்பிலையை அரைத்துக் குடிப்பது பாதுகாப்பானது.வேப்பிலை, இயற்கையிலேயே வைரசை எதிர்க்கும் தன்மை உள்ளது. பல்வேறு வகையான வைரஸ்களை அழிக்கும் தன்மை இதற்கு உள்ளது என, சர்வதேச அளவில், ஆராய்ச்சி செய்து, பல கட்டுரைகள் வெளியாகி உள்ளன. வேப்பங்கொழுந்துடன், மஞ்சள், சீரகம், மிளகு சேர்த்து அரைத்து, உருண்டையாக செய்து, அப்படியே வாயில் போட்டு விழுங்கி விட வேண்டியது தான். 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சுண்டைக்காய் அளவு, பெரியவர்கள், அரை நெல்லிக்காய் அளவு சாப்பிட வேண்டும்.நீரில் கரைத்து, வடிகட்டி குடிக்கலாம். தினம், ஓர் உருண்டை சாப்பிட்டால் போதும். வேப்பிலை மட்டும் அல்ல, துாதுவளை, ஆடாதொடை, முடக்கத்தான், முசுமுசுக்கை என, வைரஸ் தொற்றுக்கு எதிராக வேலை செய்யும், 20 மூலிகைகள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

அச்சம் தேவையில்லை



வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில், 80 சதவீதம் பேர், எந்த பிரச்னையும் இல்லாமல் குணமடைந்து விடுகின்றனர். வெறும், 20 சதவீதம் பேர் மட்டுமே, சிக்கலான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இந்த புதிய தொற்றுக்கு, மருந்துகள் இல்லை என்று சொல்வதற்கு பதில், குறைந்தபட்சம், இந்த, 20 சதவீதம் பேருக்கு, நவீன மருத்துவத்துடன், பாரம்பரிய மருத்துவ முறைகளையும் சேர்த்து, ஏன் சிகிச்சை செய்யக் கூடாது?மருந்து இதற்கு இல்லை என்று சொல்வதால் தான், தங்களுக்கு தெரிந்த, சுய மருத்துவ முறைகளை, மக்கள் பின்பற்றுகின்றனர். யாரும் அச்சப்பட அவசியம் இல்லை. இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளையும், நவீன முறையையும் பின்பற்றி, நோயைக் கட்டுப்படுத்த முடியும் என, அரசு நம்பிக்கை தர வேண்டும்.ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை பின்பற்றினால், இறப்பு விகிதம் இன்னும் குறையலாம் அல்லது இல்லாமலும் போகலாம். அப்படி ஒரு சூழலை உருவாக்கி, உலகத்திற்கே வழிகாட்டியாக நாம் இருக்க முடியும்

டாக்டர் மூலிகை மணி அபிராமி,

சித்த மருத்துவர்,

சென்னை, 96000 10696


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us