தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஆயுர்வேதம்: ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய்

ஆயுர்வேதம்: ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய்

ஆயுர்வேதம்: ரத்த பித்தம் தான் ரத்த ஒழுக்கு நோய்


PUBLISHED ON : ஆக 28, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

உடம்பின் பல்வேறு துளைகளான, கண்கள், மூக்கு, வாய், காது, மலவாய், சிறுநீர் வடி குழாய், யோனிக்குழாய் அல்லது தோல் துவாரங்கள் இவை, எதன் மூலமாவது, ரத்தம் கசிவதற்கு, 'ரத்த - பித்தம்' என்று, ஆயுர்வேதத்தில் கூறுவதுண்டு. ரத்த ஒழுக்கு நோய் என்பது, ரத்த பித்தத்தில் ஒரு நிலையே.



சேலத்தைச் சேர்ந்த, மூன்று சக்கர வாகன ஓட்டுனரின் மகன், பிறந்த நான்கு மாதங்களில், உடம்பில் ரத்தம் கட்டியது போன்ற, கறுப்புத் திட்டுக்கள் தோன்றி, 10 நாட்களுக்குள் தானாகவே மறைந்தும் போயின. மீண்டும், கருப்புத்திட்டு தோன்றியது. குழந்தைக்கு எட்டு மாதங்கள் ஆன போது, நிலைமை முற்றியது. சேலத்திலேயே, ஒரு நவீன மருத்துவரிடம் குழந்தை காண்பிக்கப்பட்டு, பல ரத்த சோதனைகள் நடத்தப்பட்டன. மற்றொரு மருத்துவமனையில், அந்த கறுப்பு அடையாளங்களை ஊசியால்குத்தியவுடன், திடீரென பெரிய வீக்கம் தோன்றியது. குழந்தை தொடர்ந்து, அழுதுக்கொண்டே இருந்தது. இந்நிலை, மூன்று நாட்கள் தொடர்ந்தன, குத்திய இடத்தில், பனிக்கட்டி வைத்து, சமாளித்தனர். குழந்தைக்கு வலிப்பும் வந்தது.



உயிருக்கு ஆபத்தான நிலையில், குழந்தையை வேலூரில், ஒரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்களுக்கு, பல்வேறு சோதனைகள் செய்த பின், அக்குழந்தைக்கு ரத்த ஒழுக்கு நோய் இருப்பதாகவும், அதற்கு தீர்வு எதுவும் கிடையாது என்றும், அம்மருத்துவர்கள் கூறினர்.



சோதனைகளுக்கு மட்டுமே பெரும் செலவு செய்த அத்தந்தை, தன் குழந்தையின் வியாதிக்கு, இவ்வளவு செலவழிக்க, தனக்கு வசதி இல்லை என்ற முடிவுக்கு வந்தார். அவரது வாகனத்தில் வரும், ஒரு குழந்தையின் தாயின் சிபாரிசின் படி, சஞ்சீவனிக்கு அழைத்து வந்தார். இங்கு வந்தபோது, அந்தச் சிறுவன் பிறந்து, 11 மாதங்கள் ஆகியிருந்தன.ஆயுர்வேதத்தின் படி, இந்நோய் ரத்த - பித்தம் என்னும் நிலையின் மாறுபாடு என்பதால், அதன் அடிப்படையில், சில மருந்துகள் கொடுக்கப்பட்டன.



முன்னேற்றம் ஏற்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பின், ரத்தம் கசிவதும், அடுத்தடுத்து வரும் பாதிப்பும், 60 சதவீதம் குறைந்ததாகக் கூறினர். முதன் முறையாக வந்த போது, குழந்தையின் உடலில் பத்து அடையாளங்கள் தென்பட்டன. சிகிச்சை துவங்கிய மூன்று வாரங்களில், நான்கு அடையாளங்கள் மட்டுமே காணப்பட்டன; அவையும் நிறம் குறைந்து, கடினம் குறைந்து காணப்பட்டன. மருந்துகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சில நாட்களுக்குப் பின், சேலத்திலிருந்து போனில் பேசிய குழந்தையின் தந்தை, குழந்தையின் ஈறுகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், ரத்தம் தொடர்ந்து கசிவதாகவும் கூறினார். போனிலேயே வேறு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, 48 மணி நேரம் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பின், அவர்கள் ரத்தக் கசிவு கட்டுப்பட்டதாகவும், ஆனால், குழந்தை மெல்லும் போது கசிவதாகவும் கூறினர். ஒரு நாள் முழுவதும், கசிவு எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், மறுநாள், மறுபடியும் ரத்த கசியத் தொடங்கியது. பெற்றோர், குழந்தையை, சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து ஈறுகளிலிருந்து ரத்தம் கசிந்த நிலையில் இருந்தது. நெற்பொறி உணவை உண்ண குழந்தை மறுத்தது. சிகிச்சை அளிக்கப்பட்டது. கசிந்த ரத்தம், சிகிச்சைக்குப் பின் கெட்டியானது. குழந்தை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை தொடர்ந்தது.



மூன்று நாட்களில், நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஐந்தாவது நாளில், வைத்திய சாலையிலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. பத்தியமாக, இரண்டு வேளை, பால் சாதமும், ஒரு வேளை, பருப்பு சாதமும் ரிந்துரைக்கப்பட்டது.

ஒன்றரை மாதத்திற்கு பின், குழந்தையை மீண்டும் அழைத்து வந்தனர். நன்றாக இருந்தது. முன்னர் வெளிறிய தன்மையோடு இருந்த குழந்தை, இப்போது ஒளிர்விட்டது. ஒன்றிரண்டு கறுப்பு அடையாளங்கள் இருந்த போதிலும், அவை மங்கலாக இருந்தன. ஒரு மாதம் சென்றதும், மறுபடியும் குழந்தையை அழைத்து வந்தனர்.

குழந்தை நன்றாக இருந்தது.



முட்டிக்கு அடியில் மட்டும் நீல நிற அடையாளங்கள் தோன்றின. ஒரு முறை குழந்தை உதட்டினை கடித்த போது கசிந்த ரத்தம், 30 நொடிகளில் நின்றது. ஒரு முறை காய்ச்சலுடன் வலிப்பும் வந்த போது, ஆயுர்வேத மருந்துகளிலேயே சமாளித்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மறுபடியும் அவர்கள் வந்தனர். நடுவில் ஒரு தருணத்தில், உதட்டில் சிறிய காயம் ஏற்பட்ட போது, ரத்தம் உடனே உறைந்தது. குழந்தைக்கு மலக்கட்டு இருந்ததால், அதற்குரிய மருந்தாக நெய், பால் உணவு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், மருந்துகள் கொடுக்கப்பட்டு, ஊர் திரும்பினர். காயம் ஏற்பட்ட போதெல்லாம் வெளியாகிய ரத்தம், சிகிச்சை தொடங்கிய சில மாதங்களிலேயே, தானாகவே உறைந்தது. மேலும், காயத் தழும்புகள் மிகவும் கறுப்பாக இல்லாமலும் எண்ணிக்கையில் குறைவதாகவும் இருந்தன. எப்போதாவது ஏற்படும் வெட்டுக்காயங்களுக்கு, மேற்பூச்சு மருந்துகள் மற்றும் உள் மருந்துகள் மூலம்

சமாளிக்கப்பட்டன. சிகிச்சை தொடங்கிய இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சிறுவனின் தோலின் நிறம் செவ்வண்ணமாக மாறியது. செம்பட்டை முடி, 'கறுகறு'வென வளர்ந்தது. முன் இருந்த வெண்தோலும், செம்பட்டை முடியும், இந்த நோயின் அறிகுறி என அறிந்து கொண்டோம். தற்போது, சிறுவனுக்கு காயம் ஏற்பட்டால், ரத்தம் தானாகவே உறைகிறது; முகத்திலும், ஆரோக்கியம் ஒளிர்கிறது. தேவையான சில மருந்துகள், தொடர்ந்து உட்கொண்டு வருகிறான்.



- டாக்டர் பி.எல்.டி.கிரிஜா,

சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்.

sanjeevanifoundation@gmail.com



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us