தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொரோனா வராமல் தடுக்க... ஆயுர்வேத மருத்துவ தடுப்பு மருந்து

கொரோனா வராமல் தடுக்க... ஆயுர்வேத மருத்துவ தடுப்பு மருந்து

கொரோனா வராமல் தடுக்க... ஆயுர்வேத மருத்துவ தடுப்பு மருந்து


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
அ நிறம் | அளவு

''கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின், உடலில் எளிதாக புகுந்து விடும். இந்த வைரசை தடுக்க, ஆயுர்வேத மருத்துவ முறையில், சிறந்த தடுப்பு மருந்துகள் உள்ளன,'' என்கிறார், காரமடையை சேர்ந்த அரசு மருத்துவர் மேகலை.

ஆயுர்வேத முறைப்படி, எதனால் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன?

உடலில் கழிவுகள் சேரும் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் நோய்கள் வருகின்றன. இதனால், ஆயுர்வேத சிகிச்சையில் முதலில், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிய பின்புதான், சிகிச்சை முறை துவக்கப்படுகிறது.ஆயுர்வேத மருத்துவ முறையை, இப்போதெல்லாம் அதிகம் பேர் பயன்படுத்த துவங்கி விட்டனரே...உண்மைதான். இந்த மருத்துவ முறையில், எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்து உள்ளது. குறிப்பாக, தீராத வியாதிகளுக்கு அதிக மருந்துகள் உள்ளன. முடக்கு வாதம், மூட்டு வாதம், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு, மருந்து மற்றும் லேகியம் உள்ளது.

ஆயுர்வேத மருத்துவ முறையில், எவ்வளவு நாட்களில் நோய்கள் குணமாகும்?

ஒருவரின் உடலின் தன்மை, நோய்களின் தாக்கம் ஆகியவற்றை பொறுத்து, குணமாகும் கால அளவு நிர்ணயமாகும். பொதுவாக இந்த மருத்துவ முறையில், சிறிது காலம் மருந்து எடுத்தால் தான் நோய் குணமாகும். ஒரு நோய்க்கு அலோபதியில் உடனடி தீர்வு கிடைக்கும். அதே நேரத்தில் ஆயுர்வேத மருந்து எடுத்துக் கொண்டால், மீண்டும் அந்நோய் உடலில் ஏற்படாது. அடியோடு குணமாக்கி விடும்.

ஆயுர்வேதத்தில், கொரோனா நோய் தடுக்க மருந்து உள்ளதா?

கொரோனாவுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் நோய் எதிர்ப்பு சக்திக்கு மருந்துகள் உள்ளன. இந்து காந்த கசாயம், ஜீரண சக்தியை மேம்படுத்தி, குடலை சுத்தம் செய்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. தசமூல கடுத்ரயம் கசாயம், சுவாச உறுப்புகளை சீராக செயல்பட வைத்து, நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கிறது.அகஸ்திய ரசாயனம், கூஷ்மாண்ட ரசாயனம் ஆகிய மருந்துகளை, கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மக்களுக்கு வழங்கலாம் என, அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு, இந்த மருந்து வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us