PUBLISHED ON : பிப் 28, 2016
தீங்கு இல்லாத உணவாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பது கீரைகள் மட்டுமே. எல்லா கீரையிலும், நோய் போக்கும் மருத்துவ குணம் இருக்கிறது. இதில் அகத்திக்கீரை ரத்த அழுத்த நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
சத்துள்ள கீரைகளில் அகத்திக்கீரை முக்கியமானது. உடலில் ஏற்படும் முக்கிய நோய்களை குணமாக்க கூடியதாகும். வைட்டமின் ஏ என்ற உயிர்ச்சத்தும், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும், புரதம், இரும்பு சத்தும் உள்ளது. வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை அளிக்க கூடியது.
உஷ்ணத்தினால் ஏற்படும் காய்ச்சல், வறட்டு இருமல், தும்மல் போன்ற தொல்லைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். வாத நோயையும் நீக்கி, கபத்தை குறைக்கும். இதயம், மூளை, கல்லீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளுக்கு வலிமையை அளிக்கும்.
கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால், அதைக் குணமாக்க அகத்திக்கீரையை வேக வைத்து, அதன் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிடலாம். அகத்திக்கீரையை சமைப்பதற்கு முன், நன்றாக நீரில் அலசி கழுவ வேண்டும். பின் அதை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும்.
அகத்திக்கீரையை வாயிலிட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அரைகுறையாக சாப்பிட்டால் அஜீரணம் ஏற்பட்டு விடும். நோயால் அவதியுற்று மருந்து சாப்பிடுபவர்கள், அகத்திக் கீரையை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், மருந்தின் சக்தியை முறித்து விடும்.
வயிற்றிலுள்ள புழு பூச்சிகளை கொல்லும். மதுபான பழக்கம் உள்ளவர்கள், அகத்திக் கீரையை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.