PUBLISHED ON : பிப் 28, 2016

தமிழகத்தில் பழங்கால மக்களிடம் காபி, டீ, குடிக்கும் பழக்கம் இல்லை. 17ம் நூற்றாண்டுக்கு பிறகுதான், தேனீர் பருகும் பழக்கம் வந்தது. அதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களிடம் மட்டும்தான் இருந்ததே தவிர பரவலாக இல்லை.
குறிப்பாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்ய துவங்கிய பிறகுதான் காபி, டீ பயிரிடும் முறை வந்தது.
நம் உணவு பழக்கத்தில் குளிர்பானம் என்றால் பழரசம், பானகம். சுடுபானம் என்றால் பனங்கருப்பட்டி, சுக்கு, மல்லி கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டி கசாயம். இந்த பானங்கள் மட்டுமே, வழக்கத்தில் இருந்தது.
சுக்கு மல்லி காபி குடித்தால் தலைவலி, தலைப்பாரம், சளித்தொல்லைகள் உடனுக்கு உடன் நீங்கும். பல நோய்களுக்கு மருந்தாக இருந்து வருகிறது. சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு மல்லி காபி என்று பலவாறாக அழைக்கப் படுகிறது.
டீ, காபி குடிப்பதால் நம் உடலுக்கு கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க விரும்புவோர், மாற்று பானமாக சுக்கு காபி பருகலாம். இதை காலை, மாலை பானங்களுக்கு பொருத்தமானது.
சுக்கு, சீரகம் ஆகிய பொருட்களை சம அளவும், கொத்தமல்லி இரு மடங்கும் எடுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். சுக்கு மல்லி காபி தயாரிக்க, 200மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும்.
செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், வெள்ளைப்படுதல், சோம்பல் போன்ற பிரச்னைகள் தீரும்.