சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவு
PUBLISHED ON : ஆக 03, 2014

'சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, சுக பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை விட, எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது' என, லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் கோபன்கேன் பல்கலை கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இதுதொடர்பாக கூறியுள்ளதாவது:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய செல்கள், சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைவாகவே உள்ளது. அதனால், சுக பிரசவத்தில், பிறக்கும் குழந்தைகளை விட, இந்த குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகும்.
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளை விட, சுக பிரசவ குழந்தைகள், தாயிடமிருந்து, அதிக பேக்டீரியாக்களை பெறுகின்றன.
உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, அளவுக்கு மீறி செயல்படுவதே, டைப் -1 நீரிழிவு நோய் மற்றும் அலர்ஜி நோய்கள் உருவாகக் காரணம். ஆனாலும், சிசேரியன் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இவ்வாறு, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

