sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/அல்சரை போக்கும் பரங்கிக்காய்!

அல்சரை போக்கும் பரங்கிக்காய்!

அல்சரை போக்கும் பரங்கிக்காய்!


PUBLISHED ON : பிப் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2018


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிக்காய் மஞ்சள் நிறத்தில் இனிப்பு சுவைடன் இருக்கும் காய். இதை அரசாணிக்காய், மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி என்றும் அழைப்பர்.

நகரத்தில் இருப்பவர்கள் இதை அதிகம் சாப்பிடுவதில்லை. கிராமங்களில், பரங்கியின் மருத்துவ குணம் அறிந்தவர்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைக்கு பூசணியில் பொரியல் கூட்டு செய்வதை விட அல்வாதான் அதிகம் செய்கின்றனர். அதிலும் பரங்கிக்காய் அல்வா மிகவும் தித்திப்பாக இருக்கும். கல்யாண விருந்துகளில் பரங்கி அல்வா பரிமாறப்படுகிறது.

பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர். சமையலுக்கு மட்டுமல்ல. விதையாகவும் எண்ணெயாகவும் கூட இது பயன்படுகிறது. தமிழகத்தில் பரங்கி பரவலாக விளையக்கூடிய காயாகும். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய், 30 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இதற்கு இப்படியொரு நிறத்தை கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பு இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.

மணல்பாங்கான இடங்களில் விளையும் பரங்கி காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பித்தம் போக்கும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும், இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.

பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல், வாய்வு, வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். பரங்கி விதைகளில் நார்ச்சத்து உள்ளது. இதில் இருக்கும் ஒரு வகை கொழுப்பு அமிலம், இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

ஒரு டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் நோய்க்கு இது நல்ல மருந்தாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us