sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

வெந்நீரும் நன்மை தரும்!

/

வெந்நீரும் நன்மை தரும்!

வெந்நீரும் நன்மை தரும்!

வெந்நீரும் நன்மை தரும்!


PUBLISHED ON : பிப் 18, 2018

Google News

PUBLISHED ON : பிப் 18, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவநாகரிகம் என்ற பெயரில், பலரும், ஐஸ் வாட்டர் குடிப்பதை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், ஐஸ் வாட்டரில் இல்லாத, அரிய மருத்துவ குணங்கள், வெந்நீருக்கு இருக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.

மலச்சிக்கல், வாயுத்தொல்லை புகார்களுடன் வரும் முதியவர்களிடம், காலையும், இரவும், ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அவ்வாறு வெந்நீர் குடித்தால், முதியவர்களின் மலச்சிக்கல் பிரச்னை தணியும்.

மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அதிகமான கழிவுப் பொருட்கள், குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி பெரும் தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து,

கழிவுகளை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. விருந்துக்கு செல்வோர், விருந்து உண்டவுடன், வெந்நீரைக் குடித்தால் சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகி விடும்.

வெந்நீர், ரத்தத்தில் இருக்கும் நஞ்சை வெளியேற்றுகிறது. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. காலையில் வெந்நீர் குடிப்பவர்களுக்கு வயிற்றில் உள்ள தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேறிவிடும். இரவில் படுப்பதற்கு முன் வெந்நீர் குடித்தாலும் வாயுப்பிடிப்பு, புளித்த ஏப்பம் ஆகிய பிரச்னைகள் ஏற்படாது.

சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு, சீரகம் போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும். காலையில் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் சரியாகும். குழந்தைகளுக்கும் தேன் கலந்த வெந்நீரை பருகக் கொடுத்தால் சளி, சைனஸ், ஆஸ்துமா, இளைப்பு ஆகியவை கட்டுக்குள் வரும்.

எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் வெந்நீர் உதவுகிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீரோ, சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும்; உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.

இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை லிட்டர் வெந்நீர் குடித்து வருவது நல்லது. அவ்வாறு செய்யும் பட்சத்தில், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன.

எல்லா நேரமும் வெந்நீர் அருந்தலாம். இருப்பினும், அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. வெந்நீரை, உணவு உண்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன் குடித்தால், செரிமானத்தைத் தூண்டும். தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. நாள் முழுவதும் செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.






      Dinamalar
      Follow us