தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம்!

சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம்!

சுறுசுறுப்பாக இருப்பது ஆரோக்கியத்திற்கு அவசியம்!


PUBLISHED ON : ஆக 15, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் ஆர்த்ரைட்டிஸ். பல்வேறு காரணிகளால், மூட்டுகளில் உள்ள எலும்புகள் சீரற்று வளர்வது, தேய்மானம், விபத்து போன்றவற்றால் மூட்டுகளில் ஏற்படும் கோளாறு இது. இதில் பல வகைகள் உள்ளன.

பொதுவாக பாதிக்கக் கூடியது ஆஸ்ட்டியோ ஆர்த்ரைட்டிஸ். வயதானால் ஏற்படும் பிரச்னை இது. மூட்டுகளை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்துவதால் ஏற்படும் விளைவு.

ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்

நோய் எதிர்ப்பு செல்கள், உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்களை, குறிப்பாக மூட்டுகளில் வைரஸ், பாக்டீரியா தொற்று இருப்பதாக தவறாகப் புரிந்து கொள்ளும். அதை அழிக்க முற்படும் போது ஏற்படும் வீக்கம். இது, 'ஆட்டோ இம்யூன் டிசீஸ்' எனப்படும்.

ஆர்த்ரைட்டிஸ் பிரச்னையை முழுதும் குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்தவே இயலும். ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள், கை விரல்களில், மூட்டுகளில் வீக்கம், வலி இருக்கும். ஒரே நேரத்தில் பல மூட்டுகளில் வலி இருக்கும்.

கோளாறு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், ரத்த பரிசோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும். பலருக்கு ஓராண்டு வரை கூட ரத்த பரிசோதனையில், 'நெகட்டிவ்' என்றே வரும். அறிகுறிகளை வைத்து டாக்டருக்கு உறுதியான சந்தேகம் இருந்தால், 'பாசிட்டிவ்' என்று முடிவு வரும் வரை காத்திருக்காமல், மருந்துகளை சாப்பிட ஆரம்பிக்கலாம்.

துாங்கி எழுந்ததும் ஏற்படும் வலி, சிறிது நேரத்தில் சரியாகி விடும். ஆனால், வயதானால் வரும் ஆஸ்ட்டியோ ஆர்த்ரைட்டிஸ் வலி நாள் முழுதும் இருக்கும். ஆர்த்ரைட்டிசின் எந்த வகையால் பாதிக்கப்பட்டாலும் உடல் எடை அதிகம் இருந்தால் மூட்டுகளில் வலி அதிகம் இருக்கும். 100 கிலோ உடல் எடையை விட, 60 கிலோ உடல் எடையில் வலி குறைவாக இருக்கும்.

எலும்பைச் சுற்றியுள்ள தசைகள் வலிமையாக இருந்தால், உடலின் மொத்த எடையை சுமப்பதில் தசைகள் எலும்புகளின் சிரமத்தைப் பகிர்ந்து கொள்ளும்; தசைகளை வலிமையாக வைத்திருப்பது நல்லது.

ஆர்த்ரைட்டிஸ் கோளாறு வராமல் தடுக்க, சீரான உடற்பயிற்சி செய்வது தான் ஒரே வழி. எல்லா வயதினரும் அவரவரின் உடல் தன்மைக்கு, தேவைக்கு ஏற்ப நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். குறிப்பாக, நடை பயிற்சி ஒரு நாளைக்கு எவ்வளவு துாரம் நடக்க முடியுமோ அந்த அளவு நடக்கலாம்.

தொற்றுக்கு பின்...

முழு வீச்சில் உடற்பயிற்சி செய்யும் போது, சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முறையாக உடற்பயிற்சி செய்யாமல், தவறாக செய்தால், தசைகளில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

ஓடுவது, நடப்பது, 'ஜிம்' பயிற்சி என்று எதுவாக இருந்தாலும், முதல் நாள் 10 நிமிடம், அடுத்த நாள் 20 நிமிடங்கள் என்று சிறிது சிறிதாக நேரத்தை அதிகரிக்க வேண்டும். எந்த உடற்பயிற்சியை துவக்கும் முன்பும், 'ஸ்ட்ரெச்சிங்' செய்வது அவசியம்.

தசை பிடிப்பு, அயர்ச்சி, வலி போன்ற பாதிப்புகளை இதனால் தவிர்க்கலாம். 'வார்ம் அப்' செய்வதும் அவசியம். கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்; நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது, அந்தந்த உடற்பயிற்சிக்கு ஏற்ற பாதுகாப்பு கவசம், உடைகளை அணிய வேண்டும்.

'ஒர்க் பிரம் ஹோம்'

நீண்ட நேரம் அமர்ந்தே வேலை, உடல் எடையை ஒரு பக்கத்திலேயே சாய்ப்பது, லேப்டாப், கம்ப்யூட்டர், மொபைல் போன் பார்ப்பது, 'டைப்' செய்வது, இதனால் கழுத்து, கைகளில் வலி என்று நிறைய இளம் வயதினர் வருகின்றனர்.

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, 'பிரேக்' எடுத்து சிறிது துாரம் நடந்து, கை, கால்களை ஸ்ட்ரெச்சிங் செய்து விட்டு, வேலையை தொடரலாம். இதனால், எலும்பு, தசை மட்டுமல்ல, உடலின் மொத்த உறுப்புகளுக்கும் நல்லது.

டாக்டர் யாஷ் குலாட்டி,

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

சிறப்பு மருத்துவர், அப்பல்லோ

மருத்துவமனை குழுமம், புதுடில்லி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us