PUBLISHED ON : ஆக 05, 2012
எனக்கு 4 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்கு அட்டூணிஞீடிணீடிணஞு என்ற மாத்திரை எடுத்து வருகிறேன். சில மாதங்களாக ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை. நான் என்ன செய்யலாம்?
எஸ். பிரசாத், கம்பம்
நம் இந்தியர்களில் பெரும்பாலோருக்கு ரத்தக்கொதிப்பு இருப்பது தெரியாமலேயே உள்ளது. அதுபோல ரத்தக்கொதிப்புக்கு மாத்திரை எடுக்கும் பலருக்கும், அது கட்டுப்பாட்டில் உள்ளதா, இல்லையா என்ற விவரம் தெரியாமலும் உள்ளனர். ஒருவருக்கு ரத்தஅழுத்தம் எவ்வாறு உள்ளது என அறிவதும், அதற்கு மாத்திரை எடுப்போர் அது கட்டுப்பாட்டில் உள்ளதா என அறிவதும் மிகமிக அவசியம். ஏனெனில் ரத்தக்கொதிப்பால் மூளை, சிறுநீரகம், இதயம், கண்களுக்கு பாதிப்பின்றி பாதுகாக்க முடியும்.
எனவே, உங்கள் உணவுப் பழக்கத்தை சரியாக மாற்றி அமைத்து, குறிப்பாக உப்பை குறைத்து, நடைப்பயிற்சி மேற்கொண்டு, உயரத்துக்கு ஏற்ற எடையை பராமரித்து வரவேண்டும். அட்டூணிஞீடிணீடிணஞு மாத்திரையால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லையெனில், வேறு வகை மாத்திரைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் ரத்த அழுத்தம் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். தற்போது பக்கவிளைவில்லாத நல்ல மாத்திரைகள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. எனவே, மாத்திரைகளை கண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை.
எனது வயது 48. சர்க்கரை, ரத்தக்கொதிப்பு இல்லை. டிரெட்மில் பரிசோதனையும் நார்மலாக உள்ளது. குடும்பத்தில் இதய நோய் பாதிப்புள்ளவர்கள் இருக்கின்றனர். நான் இதய நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பி. கண்ணபிரான், காரைக்குடி
இதய நோய் பெரும்பாலும் தடுக்க கூடியது என்பது அசைக்க முடியாத உண்மை. முதலில் உணவுப் பழக்கத்தை சரியாக மாற்றி அமைப்பது அவசியம். உணவில் எண்ணெயை அறவே தவிர்ப்பது, உப்பு, சர்க்கரை அளவை நன்கு குறைப்பது, காய்கறி, பழங்களை நிறைய உண்பது, தினமும் அரை மணிநேரம் நடைப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். இவை தவிர ரத்தக் கொதிப்பு இருந்தால் அதை, 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை வெறும் வயிற்றில், 100 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து, 140க்கு கீழும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். இவை தவிர, Statin வகை மாத்திரையை எடுப்பதும் அவசியம். ஏனெனில் அது, ரத்தத்தில் கெட்டக் கொழுப்பை குறைப்பதுடன், ரத்தக்குழாயின் உட்புறச் சுவரை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் தடுக்கப்படுகின்றன.
டாக்டர் விவேக்போஸ்,
மதுரை.