sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மலர்ச்சி தரும் காலிபிளவர்

மலர்ச்சி தரும் காலிபிளவர்

மலர்ச்சி தரும் காலிபிளவர்


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடலுக்கு தெம்பு தரும் பூ வகைகளில் ஒன்று பூகோஸ் என்றழைக்கப்படும் காலிபிளவர். உடலில் உள்ள நோய்களை போக்கும் அரிய மருத்துவ குணம் அதிகம் உள்ளது. மலை மாவட்டங்களில், அதிகம் விளைவிக்கப்படும் காய்கறிகளில், இதுவும் ஒன்று.

முட்டைக்கோசும், காலிபிளவரும், ஒரே நவீன காய்கறி வகையை சேர்ந்தது. பொட்டாசியம், வைட்டமின், நார்ச்சத்து உட்பட பல சத்துகள் அடங்கியுள்ளன. கூடுதலாக வேக வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் கரைந்து விடும். கொழுப்பு சத்து இல்லாத காய்கறி இது. குறைந்த கலோரிகள் கொண்டது.

இதனால் இருதய நோய்க்கு இதமான காய்கறி; புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டது.

மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், ÷சாடியம், புரதச்சத்து, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன. வாரம் இருமுறை உட்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் நலம் சீராக இருக்கும். பார்வைக்கு தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் 'சி', மாங்கனீஸ், பீட்டா கரோட்டின் உட்பட பல்வேறு சத்துக்களும் அடங்கியுள்ளன. மன அழுத்தம், இருதய நோய்

களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

நார்ச்சத்து காணப்படுவதால், ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்தி, மலச்சிக்கலை போக்குகிறது. உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால், மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும். காலிபிளவர் இலைகளை பயன்படுத்தி அடிப்பட்ட வீக்கம், மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும். காலிபிளவரை பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப்பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறது. எலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தகசிவு இருந்தால் அவைகள் சரியாகும். சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உன்னதமான இதய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் 'சி' சத்து கிடைக்கிறது.

காலிபிளவர், கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில், காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us