sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/கருப்பை காக்கும் "நாவல்'

கருப்பை காக்கும் "நாவல்'

கருப்பை காக்கும் "நாவல்'


PUBLISHED ON : மே 21, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2017


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மனிதர்களது வாழ்வில், ஒருமுறை வந்துவிட்டால் தீராது பின்தொடரும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். இதற்கு, ஆதித்தமிழ் மரபிலேயே நாவற்பழம் சிறந்த தீர்வாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல பெண்களின் கருப்பை காக்கும் கவசமாகவும் நாவல் பழங்கள் திகழ்கின்றன.

நாவல் பழங்கள் நோய்களை துரத்தும் அருமருந்தாக இருப்பதை நமது மூதாதையர் கண்டுள்ளனர்.

நாவல் பழத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உவர்ப்பு சுவையோடு இனிப்பு கலந்து, அருஞ்சுவையாய் நம் மை அசரடிக்கும்.

நீரிழிவுநோய், சரும நோய்கள், உடல் சூடு தடுக்கும் வல்லமை நாவல் பழங்களுக்கு உண்டு. ஞாபகசக்தி அதிகரிக்கவும் இந்தப் பழம் பரிந்துரைக்கப்

படுகிறது.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைப்பதுடன் மலச்சிக்கலையும் போக்கும். மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு

வந்தால் நோயின் தாக்கம் குறையும்.

நாவற்பழங்கள் மட்டுமின்றி, நாவல் மரத்தின் பாகங்களும் கூட, அருமையான மருத்துவ குணங்கள் கொண்டவை தான். நாவல் பட்டையை இடித்து,

நீர் விட்டு அந்தப் பட்டையை கொதிக்க விடவேண்டும். அந்தக் கொதிநீரை வடிகட்டி, அருந்தி வந்தாலும் நீரிழிவு குணமாகும்.

பெண்களுக்கு கருப்பை குறை பாடுகளை போக்கவும், நாவற்பழங்களும், நாவற்பழ பட்டையை கொதிக்க விட்ட நீரும் பயன்படுகிறது.

ஏராளமான நாவற்பழ வகைகளில், தற்போது ஒருசில வகைகளே சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன. கூடுமானவரை நாவற்பழங்களை தேடித்தேடி உண்டால், தெவிட்டாத இன்பத்தை நம் வாழ்வில் காணலாம். என்ன வாசகர்களே, நாவற்பழங்களை வாங்க கூடையோடு கிளம்பி விட்டீர்கள்தானே?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us