தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடலை சுத்தம் செய்யும் ஆமணக்கு எண்ணெய்

உடலை சுத்தம் செய்யும் ஆமணக்கு எண்ணெய்

உடலை சுத்தம் செய்யும் ஆமணக்கு எண்ணெய்


PUBLISHED ON : நவ 12, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவ குணமுள்ள விதைச்செடிகளில் ஆமணக்கு சிறந்ததாகும். இதன் இலை, வேர், விதை, எண்ணெய் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. சிற்றாமணக்கின் இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். இலையை சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும்.

ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், ரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வந்தால், ரத்தக் கசிவு மறையும்; ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும்.

ஆமணக்கு எண்ணெய் புகையில்லாமல் எரியும் ஆற்றல் கொண்டது. இரவு நேரங்களில் விளக்கெரிக்க இதை பயன்படுத்தலாம். அதனால்தான், ஆமணக்கெண்ணெய்க்கு, விளக்கெண்ணெய் என, பெயர் வந்தது. தமிழகத்தின் ஒரு சில இன்றும் இதை கொட்டைமுத்து எண்ணெய் என்கின்றனர். சிற்றாமணக்கு விதைகளே சிறந்த மருத்துவக் குணம் கொண்டுள்ளன.

ஆமணக்கிலிருந்து இரண்டு முறைகளில் எண்ணெய் எடுக்கலாம்.

ஆமணக்கு விதைகளை இயந்திர செக்குகளில் இட்டு, ஆட்டி எண்ணெய் பிழிவது ஒரு வகை. ஆமணக்கு விதைகளை இடித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் பெறுவது இன்னொரு முறை. இந்த 2வது முறை, ஊறின எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில்தான் நம் மூதாதையர்கள், எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர்.

பருப்பு வேகவைக்கும் போது அதில், இரண்டு துளி ஆமணக்கு எண்ணெயை விட்டால், பருப்பில் உள்ள வாயு நீங்கிவிடும். பிறந்த குழந்தை முதல் கர்ப்பிணி மற்றும் முதியோர் வரை அனைவருக்குமான சிறந்த குளியல் எண்ணெய் இது. அனைத்து தரப்பினருக்குமான மலச்சிக்கலை நீக்குவதற்கு பாதுகாப்பான மருந்து இது. காய்ச்சிய எண்ணெயில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வந்தால், மலச்சிக்கல் நீங்கும். ஆமணக்கின் விதையிலிருந்து இரு வகையாக எண்ணெய் எடுக்கப்படும். தினமும் காலை, மாலை இரு வேளை மூன்று மி.லி., அளவு உள்ளுக்கு கொடுத்து வந்தால், நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலக்கட்டு, மூட்டுவலி போன்றவை மறையும். ஹெர்னியா, வயிற்றுப் பூச்சிகள், அஜீரணம், போன்றவற்றிற்கும் மூன்று மில்லி எண்ணெயை தினசரி காலை, மாலை உள்ளுக்கு கொடுக்கலாம். வீக்கம், உடல் வலி, போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுத்து வந்தால் நல்ல பலன் தெரியும்.சிறுநீர் கோளாறுகள், எரிச்சல், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us